புதன், 14 அக்டோபர், 2009

சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகையின் 86 வது நாண்மங்கல விழா

14.10.2009 அன்று புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு சீர்வளர்சீர் பேரூரடிகளார் அவர்கள் அடியார் பெருமக்களுக்கும்,அன்பர்களுக்கும்,மகளிர்களுக்கும்,குழந்தைகளுக்கும் புத்தாடை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
10மணி அளவில் மகம்நாள் வேள்வி வழிபாடு,சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகையின் அருளார்ந்த தலைமையில் நடைபெற்றது.
10.30 மணி அளவில் அருள்மிகு சாந்தலிங்கப்பெருமானுக்கு பெருந்திருமஞ்சன வழிபாடு
11.30மணி அளவில் அலங்கார வழிபாடு,பேரொளி வழிபாடு நடைபெற்றது.
நண்பகல் 12.30 மணிஅளவில் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் சீர்வளர்சீர் கயிலைக்குருமணி அவர்களின் நாண்மங்கல விழா வழிபாடு அடியார் பெருமக்கள் புடைசூழ இனிதே நடைபெற்றது.
பங்குபெற்ற அருளாளர்கள் ;
சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர அடிகளார்
பழனி சாதுசாமிகள் திருமடம் தவத்திரு.சாதுசண்முக அடிகளார்
தென்சேரிமலை திருநாவுக்கரசர் திருமடம் தவத்திரு.முத்துசிவராமசாமிஅடிகளார்
வராகி பீடம் தவத்திரு.மணிகண்ட அடிகள்
சின்மயா மிசன் அசித் சைதன்யா அவர்கள்
மற்றும் தொழிற்சார் நிறுவனத் தலைவர்கள்,மற்றும் சிவனடியார்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.














குருமகா சந்நிதானம் சிவனடியார்களுக்குச் சிறப்பு செய்கிறார்


புனித காணிக்கை அன்னை திருச்சபையைச் சேர்ந்த சகோதரிகளின் அன்புக் காணிக்கை

வெள்ளி, 9 அக்டோபர், 2009

நாண்மங்கல விழா அழைப்பிதழ்

திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் சீர்வளர்சீர் கயிலைக்குருமணி அவர்களின் நாண்மங்கல விழா அழைப்பிதழ்





பேரன்புடையீர்,
அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் இன்னருள் பெருகுக. மகம் நாள் வழிபாடும், சைவமும் தமிழும் தழைத்தோங்கப் பணி செய்யும் பேரூரடிகளாரின் 86 ஆம் நாண்மங்கல விழா திருவள்ளுவராண்டு 2040 புரட்டாசி 28 ஆம் நாள் (14.10.2009) புதன்கிழமை அன்று முற்பகல் திருமடத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு திருவருளும் குருவருளும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.


இங்ஙனம்
விழாக்குழுவினர்.

வியாழன், 8 அக்டோபர், 2009

உலக பார்வை தினம்

கோயம்புத்தூரில் உலக பார்வை தினத்தை முன்னிட்டு காந்திபுரத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் அடிகளாருடன் விஜயா பதிப்பகம் திரு.வேலாயுதம் அவர்களும் அமைப்பாளர்களும்






வெள்ளி, 2 அக்டோபர், 2009

தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் தலைவரும்,உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் துணைத் தலைவரும் திருமடத்தோடு நீண்டகாலத் தொடர்புடையவருமான திரு.வா.செ.குழந்தைசாமி அவர்கள் "பாரதிதாசன் விருது " பெற்றமைக்காக வாழ்த்துப் பெறுகிறார்.