புதன், 13 மே, 2009

குரு மரபு

எல்லாம் உடையான் குருவாகி ஈங்குஎமது
அல்லல் அறுத்தான் என்றுஉந்தீபற
அவன் தாள் தொழுவாம் என்றுஉந்தீபற
-சாந்தலிங்கப் பெருமான்

திங்கள், 4 மே, 2009

தவத்திரு.மருதாசல அடிகளார்

திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழி திருப்பேரூராதீனம் இளைய பட்டமாகவும்,உதகை காந்தள் அருள்மிகு ஆலமர் செல்வர் திருமடத்தின் ஆறாவது குருமகா சந்நிதானமாகவும் அருள்பாலிக்கும் கயிலை மாமணி தவத்திரு.மருதாசல அடிகளார் கோவை அன்னூர் அருகே உள்ள முதலிபாளையம் எனும் ஊரில் திரு.சி.வேலுசாமி கவுண்டர் திருமதி.சுப்பாத்தாள் அம்மையாரின் திருமகவாகவும்,ஒருமகவாகவும் திருவள்ளுவர் ஆண்டு 1992 தை 12ஆம் நாள் 1961 ஆம் ஆண்டு சனவரி 25ஆம் நாள் பிறந்தவர்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவர் எம்.ஏ.,( தமிழ் ) எம்.ஏ ( கூட்டுறவு )எம்.பில் ( ஆய்வியல் நிறைஞர் ),பி..ஜி..எல்.( சட்டம் ) மற்றும் படிப்புகளை கற்றுத் தேர்ந்தார்.சாந்தலிங்கரின் மெய்யியல் கோட்பாடுகள் எனும் தலைப்பில் இவர் செய்த ஆய்வுக்காக பாரதியார் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் ( டாக்டரேட் ) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
தேசிய அளவிலும் ,வெளிநாடுகளிலும் நடந்த கல்வி,கலாச்சார,சமய கருத்தரங்குகளில் கலந்து கொண்டு தமிழ்மொழி மற்றும் தமிழக மக்களின் தொன்மை,சமயம்,கலாச்சாரம்,பண்பாடு போன்றவற்றை வெளிப்படுத்தி உள்ளார்.இப்பணிக்காக இவர் நேபாளம்,சீனா,துபாய்,பிரான்சு,செர்மனி,ஆலந்து,பெல்சியம்,மொரிசியஸ்,இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளில் உள்ள மக்களின் அன்பு அழைப்பை ஏற்று அங்கு சென்று உரையாற்றி உள்ளார்.
அடிகள் பெருந்தகை மேற்குலக சைவ கருத்தரங்கை மூன்றுமுறை வழி நடத்தியதுடன் உலகின் வெவ்வேறு பகுதிகளில் நடந்த சைவ கருத்தரங்குகளிலும் பங்கேற்றுள்ளார்.
கேந்திரிய மார்க் தர்சக்,ஆச்சார்ய சபா,தர்மா ரட்சா மஞ்ச், ராமசேது பாலக்குழு,ராம சென்ம பூமிக்குழு போன்ற அமைப்புகளில் உறுப்பினராகவும்,இந்து துறவியர் பேரவையின் இணைச்செயலாளராகவும்,தமிழக புலவர் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.விசுவ இந்து பரிசத்தின் மூலம் இலங்கைக்கு சென்ற ஆறுபேர் கொண்ட அமைதிக்குழுவிலும் அங்கம் வகித்து உள்ளார்.
பாரதத்தில் உள்ள பல புனித இடங்களுக்கும் பக்தர்களை அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல்,புனிதத் திருமலையாம் கயிலைக்கு மூன்றுமுறை சென்று வந்துள்ளார்.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவை ( செனட் ) உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.மக்கள் சேவையே மகேசன் சேவை எனும் அடிப்படையில் இதுவரை 18 முறை குருதிக்கொடை வழங்கியுள்ளார்.
தமிழ்முறையில் குடமுழுக்கை செய்யும் ஊர்களுக்குச் சென்று அவர்களை ஊக்குவித்து அருளாசி வழங்கி வருகிறார்.
போற்றி ஓம் நமசிவாய

சனி, 2 மே, 2009

உரை தலைப்புகள்

அடிகளார் அமெரிக்க வாழ் தமிழர்களிடையே கீழ்கண்ட தலைப்புகளில் தனது கருத்துகளை பகிர்ந்து கொள்ள உள்ளார்.
1.வழிகாட்டும் வள்ளுவம்
2.திருநெறிய தமிழ்வேள்வி வழிபாடு
3.திருமறை சிந்தனை
4.கூட்டு வழிபாடு
5.வேண்டுதல் விண்ணப்பம்
6.குடும்ப அமைதி நிட்டை
7.குலதெய்வ வழிபாடு
8.ஐம்பூத ஓர்மை( தியானம் )
9.ஐம்பொறி ஓர்மை
10.ஓம்கார ஓர்மை

அடிகளாரின் நிகழ்ச்சி நிரல்

அடிகளாரின் அமெரிக்க வருகையை ஒட்டி அன்பர்கள் கீழ்கண்டவாறு நிகழ்ச்சிநிரலை ஏற்பாடு செய்துள்ளனர்.ஆர்வலர்களை அன்போடு அழைக்கிறோம்.அருகிலுள்ள நண்பர்களுக்கும் இத்தகவலை கொண்டுசேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
ஒட்டுமொத்த நிகழ்ச்சி நிரலையும் அறிய திரு.சிவக்குமார் அலைபேசி 908 693 0198,வீடு 732 516 9139,மின் அஞ்சல்shivkumark@zslinc.com,திருமதி.புஷ்பா 434 969 1161 becky@moonstar.com இருவரையும் தொடர்பு கொள்ளலாம்,
1) மே 4 ஆம்தேதி முதல் 6 ஆம் தேதி வரை ப்ரீமாண்ட்,சான்பிரான்சிஸ்கோ
தொடர்பு முகவரி.புகழ் குமாரசாமி.அலைபேசி 415 412 4793.வீடு 510-494-2331.
pugal_k@yahoo.com
2) 7 ஆம் தேதி லாஸ்ஏஞ்சல்ஸ், மணிமேகலை 310 546 3272
3) 8 ஆம் தேதி முதல் 11 ஆம்தேதி வரை நியூஜெர்ஸி மற்றும் நியூயார்க்
திரு.சிவக்குமார் தொடர்பு எண்கள் 908 693 0198; 732 516 9139
4) 13 ஆம் தேதிமுதல் 17 ஆம் தேதி வரை யோகாவில் ஆசிரமம்
திருமதி.புஷ்பா 434 969 1161, becky@moonstar.com
5) 18 மற்றும் 19 ஆம் தேதி வர்ஜீனியா மற்றும் வாஷிங்டன்
திருமதி.சாந்தகுமார் வினு. 703 839 2456.
6) 20 மற்றும் 21 ஆம்தேதி புளோரிடா
தொடர்பு முகவரி.திரு.வேலுசாமி,941 232 9448,941 383 4249.
திரு.இராமசாமி 561 297 3091,மின் அஞ்சல் rramasam@fau.edu ;திருமதி.கோமளவல்லி பரிதி.678 677 4379 மின் அஞ்சல். v_komala@yahoo.com
7) 22 மற்றும் 23ஆம் தேதி டெட்ராய்ட்
திரு.சிவக்குமார் 248 910 5034 மின்அஞ்சல் prshiva@hotmail.com
8) 24 ஆம் தேதி சிகாகோ
திரு.முருகசாமி 847 669 9491 ;847 636 0027
திருமதி.அகிலா அலைபேசி 847 452 4407,வீடு 847 353 1372
9) 25 மற்றும் 26 ஆம்தேதி மினியாபொலிஸ்
திருமதி சத்யா 507 337 0023

சேர வாரும் செகத்தீரே















1

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

இளைய அடிகளாரின் அமெரிக்கா வருகை

சுவாமி சச்சிதானந்தா அவர்கள் உலகமெங்கும் உள்ள யோகக்கலை பயின்றவர்களால் அறியப்பட்ட ஒரு மாமனிதர்.இந்தியாவிலும்,இலங்கையிலும் பின்னர் அமெரிக்காவிலும் தனது சேவையினை தொடர்ந்தார்.வர்ஜீனியாவில் 700 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இவரது இன்டெக்ரல் யோகா இன்ஸ்டியூட் இந்திய கலைகளை உலக மக்களிடையே பரப்பி வருகிறது.


இவர்களது அழைப்பை ஏற்று திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழி திருப்பேரூர் ஆதீனம் இளையபட்டம் மற்றும் உதகமண்டலம் ஆலமர் செல்வர் திருமடத்தின் ஆறாவது குருமகா சந்நிதானமாகவும் விளங்குகின்ற தவத்திரு.மருதாசல அடிகளார் மே 13ஆம் தேதிமுதல் 18 ஆம் தேதி வரை பாரத பண்பாடு மற்றும் சமயம் சார்ந்த வழிபாடுகள் பற்றிய உரைநிகழ்த்த உள்ளார்.>

அது சமயம் அமெரிக்க வாழ் தமிழர்கள் தங்களது பகுதிகளுக்கும் வருகை தர அழைத்துள்ளனர்.தமிழர் அமைப்புகள் வாழ்வியல் மற்றும் அருளியல் சார்ந்த தங்களது ஐயங்களுக்கு அவருடன் கலந்து உரையாட அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்பு கொள்ள perurmadam@gmail.com.

சனி, 28 மார்ச், 2009

தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு

மேலைச்சிதம்பரமாம் திருப்பேரூரில் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் ஆதி குருமுதல்வர் அருள்மிகு சாந்தலிங்க அடிகளாரின் திருக்கோயில் குடமுழுக்கு விழா சீர்வளர்சீர் அடிகளாரின் சீரிய வழிகாட்டுதலின்படி மாசித்திங்கள் 24ஆம் நாள் ( 08.03.2009 ) ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச்சிறப்பாக அமைந்தது.விழாவில் அருளாளர்களும்,ஆதீன கர்த்தர்களும்,துறவிகளும்,அன்பர்களும் மிகத்திரளாகக் கலந்து கொண்டனர்.விழாவிலிருந்து சில புகைப்படங்கள்.

தவத்திரு.சிவலோகநாத அடிகள் தலைமையில் நிலத்தேவர் வழிபாடு



தவத்திரு.பொன் மாணிக்கவாசக அடிகளார் மூத்த பிள்ளையார் வழிபாட்டை நடத்துகிறார்



சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர அடிகளார்




தவத்திரு.முத்து சிவராமசாமி அடிகளார் ,தென்சேரி மலை ஆதீனம்




தவத்திரு.சுந்தர மூர்த்தி சுவாமிகள் மௌனமடம்,சிதம்பரம்




தவத்திரு.சாது சண்முக அடிகளார் ,பழனி ஆதீனம்



திருக்குடங்களில் திருவருள் சக்திகளை எழுந்தருளச் செய்தல்







திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா



திருமுறை மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராசருக்கு வழிபாடு



அருள்மிகு சாந்தலிங்கப் பெருமானுக்கு பேரொளி வழிபாடு

தவத்திரு.நாச்சியப்ப ஞான தேசிகர்,கோவிலூர் ஆதீனம்

வெள்ளி, 6 மார்ச், 2009

ஞானாம்பிகை நுழைவுரிமைப்பள்ளி 32ம் ஆண்டு விழா

நாள் : 06.03.2009
நேரம் : காலை 10.00 மணி


விழா : ஞானாம்பிகை நுழைவுரிமைப்பள்ளி திலகவதியார் மன்ற 32-ஆம் ஆண்டு விழா

Ø திருப்பூர் பார்க் கல்வி நிறுவன தலைவர் திருமதி. அனுசு இரமேசு மற்றும் உதகை திருமதி. பிரேமா ரவிபிரகாசு அவர்கள் திருவிளக்கேற்றி சிறப்பித்தார்கள்.
Ø பார்க் கல்வி நிறுவன தலைவர் திரு. இரமேசு அவர்கள் தலைமை ஏற்றார்.
Ø உதகை திரு. ரவிபிரகாசு அவர்கள் முன்னிலை வகித்தார்.

Ø பேரூராதீனம் இளையபட்டம் தவத்திரு.மருதாசல அடிகளார் அவர்கள் அருளுரை வழங்கி சிறப்பித்தார்

Ø கோவை நுழைவுரிமைப்பள்ளி ஆய்வாளார் திருமிகு.கே.காளியண்ணண் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
Ø தவத்திரு.விசுவராசரிசி பாலமகரிசி அவர்கள் மகிழ்வுரை வழங்கினார்.
Ø உதகை திரு.ஆ.தட்சிணாமூர்த்தி அவர்கள் மாணாக்கர்களுக்கு பரிசு வழைங்கினார்.
Ø இறுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.