தேசியக் கருத்தரங்கு
உலகளாவிய வணிகத்தில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. இன்றைய மாறி வரும் சூழலில் மெய்ஞான வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சிக்கு அடிப்படையாகவும், ஆதரவாகவும் விளங்கும் என்பதில் ஐயம் இல்லை. காலம் காலமாக நம்முடைய முன்னோர்கள் “வாழையடி வாழையாய்” தோன்றி நமக்குப் பல்வேறு மெய்ஞானக் கருத்துக்களைக்கூறி விளக்கி வந்துள்ளனர். ஆனால், அவற்றை நாம் ஏற்ற போற்றுவதில் குறைந்த அளவே கவன ம் செலுத்துவதால், விஞ்ஞான அறிவால் நிறைந்த ஆக்கம் பெறுவதற்குப்பதிலாக, குறைவான முன்னேற்றமும் மிகுதியான தீங்கும் பெற்று செய்தாலும் “செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமை தான் நமது தெய்வம்” என்ற அடிப்படையில் தொழிலைச் செய்து வரும் பொழுது நமக்கு நிரந்தர செல்வம் கிடைக்கும் என்பது உறுதி.
தமிழின் மூத்த இலக்கண நூலாகவும் முதன்மையான இலக்கண நூலாகவும் விளங்குகின்ற தொல்காப்பியம், தமிழ்ப்பண்பாட்டின் கருவூலகங்களாக விளங்குகின்ற சங்க இலக்கியங்கள், தமிழர்தம் அறிவுக்கொடையின் உயர்நிலை வெளிப்பாடாகத் கொள்ளத்தக்கத் திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள். காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், பல்வேறு வகைகளாக வளர்ந்து வருகின்ற இக்கால இலக்கியங்கள் முதலிய தமிழிலக்கியங்கள் வெறும் இலக்கிய நுகர்வுக்கு உரியவனாக மட்டும் நிகழவில்லை. கற்பனை சுவையும், உவமை, உருவகம், ஓசை நயம் போன்ற அணிநலன்களையும் கொண்டவையாக மட்டும் தமிழ் இலக்கியங்கள் அமையவில்லை. மாறாக தொல்லியல், சமூகவியல், பொருளியல், மானிடவியல், வணிகவியல், மேலாண்மையியல், உயிரியல், மருந்தியல், வரலாற்றியல், வானியல் மற்றும் இதழியல் போன்ற கூட்டாய்வுகளை (Inter disciplinary) மேற்கொள்வதற்குரிய விரிந்த களங்களையும் தளங்களையும் கொண்டவைகளாகத் தமிழ் இலக்கியங்கள் விளங்குகின்றன.
மேற்சுட்டிய துறைகள் சார்ந்த குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் நெட்டோட்டமாகக் காணக்கிடக்கின்றன. எனவே, தமிழக அரசின் சார்பாக, எதிர்வரும் சூன் திங்களில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு வெகு சிறப்பாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளதையொட்டி, “தமிழ் இலக்கியத்தில், வணிகமும் வர்த்தகமும்” என்னும் பொருண்மையில் இருநாள் தேசியக் கருத்தரங்கம் 2010 மார்ச் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் பாரதியார் பல்கலைக்கழக வணிகவியல் துறையும், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியும் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளது. அதனை பெருமைக்குரிய தமது கடமையாகக் கருதும் வணிகவியல் துறையினராகிய நாங்களும், பேரூர் தமிழ்க் கல்லூரியும் அக்கருத்தரங்கில் பங்கேற்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்தரங்க மையப் பொருண்மை
தமிழ் இலக்கியத்தில், வணிகமும் வர்த்தகமும் என்பது இக்கருத்தரங்கின் மையப் பொருண்மையாகும். இம்மையப் பொருண்மையையொட்டி.
1 சங்க இலக்கியங்களில் வணிக மற்றும் மேலாண்மை சிந்தனைகள்
(Commerce and Management Thought in Sangam Literature)
2 தமிழ் இலக்கியங்கள் கூறும் நேரம் மற்றும் மன அழுத்த மேலாண்மைக் கோட்பாடுகள்.
Ti me and Stress Ma nagament Principles in Tamil Literature)
3 தமிழ் இலக்கியங்களில் காணும் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வணிகங்கள்.
(Nat ional and International Trade in Tamil Literature)
4 தமிழ் இலக்கியங்கள் சுட்டும் வேளாண்மையும் வணிகமும்.
(Agriculture and Trade in Tamil Literature)
5 சங்க இலக்கியங்களில் பண்டமாற்று வணிகம்.
(Barter Trade in Sangam Literature)
6 தமிழர் இலக்கியத்தில் மேலாண்மை சிந்தனைகள்
(Management Thoughts in Tamil Literature)
7 தமிழ் இலக்கியம் கூறும் மனிதவள மேலாண்மை
( Human Resource Management in Tamil Literature)
8 வள்ளுவம் மற்றும் வள்ளலாரின் சமூக பொருளியல் சிந்தனைகள்.
(Socio - Economic Thoughts of Valluvar and Val lalar)
மேற்கண்ட தலைப்புகளிலும், தொடர்புடைய பிற தலைப்புகளிலும் வணிகம், பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடுகள் சார்ந்த கருத்துக்களை, விரிவாக ஆராய்ந்து கருத்தரங்கில் எடுத்துரைக்க கட்டுரைகள் வரவேற்க்கப்படுகிறது.
1 கட்டுரைகள் வந்து சேர கடைசி நாள் : 25 . 02 . 2010
2 கட்டுரைகள் ஏற்கப்படுவதைத் தெரிவிக்கும் நாள் : 05. 03. 2010
3 கருத்தரங்கம் நடைபெறும் நாட்கள் : மார்ச் 12 &13..2010
பங்கு பெறுவோர் அனுப்ப வேண்டிய பதிவுத் தொகை
ஆராய்ச்சி மாணவர்கள் - ரூ.100/- (நூறு மட்டும்).
மற்றவர்கள் - ரூ.200/-(இரு நூறு மட்டும்).
கருத்தரங்கு நிகழ்வுகளின் போது தேநீர், மதிய உணவு, கருத்தரங்க நினைவுப் பொருள் ஆகியன வழங்கப்பெறும். ஆய்வாளர்கள் வேண்டிக்கொண்டால் தங்குமிடம் ஏற்பாடு செய்து தரப்படும். அதற்குரிய கட்டணத்தை அவர்களே செலுத்துதல் வேண்டும். பயணப்படி, நாட்படி வழங்க இயலா நிலையில் உள்ளோம்.
பதிவுக் கட்டணத்தை கோயம்புத்தூரில் அமைந்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஏதேனும் வங்கி ஒன்றில் மாற்றத்தக்க “The Organizer School of Commerce, Bharathiar University, Coimbatore-46” என்னும் பெயரில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலையாக அனுப்புதல் வேண்டும்.
கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி.
முனைவர் மோ.சுமதி இணைப்பேராசிரியர்,
வணிகவியல் துறை,
பாரதியார்பல்கலைக்கழகம்,.
கோயம்புத்தூர் 641 046.அலைபேசி எண்.94433 62947
புதன், 10 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)