சனி, 29 ஜனவரி, 2011

புத்தக கண்காட்சி விருந்தினர்கள்

தொண்டை மண்டல ஆதீன குருமகா சன்னிதானம் அவர்கள்



பாண்டிச்சேரி தவத்திரு ஓம்காரானந்தா அடிகளார் அவர்கள்


வாழும்கலை நிறுவனர் தவத்திரு இரவிசங்கர்ஜி அவர்கள்



இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்சுன்சம்பத் அவர்கள்

புதன், 26 ஜனவரி, 2011

இந்து சமய சேவை மற்றும் புத்தக கண்காட்சி

சென்னையில் 25.01.2011 அன்று திருவான்மியூர் வாசுதேவன்நகரில் நடந்த இந்து சமய சேவை மற்றும் புத்தக கண்காட்சியில் இளைய பட்டம் அவர்கள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்கள்











இராமகிருஷ்ண மடம் தவத்திரு.கௌதமானந்தா சுவாமிகள் அவர்கள் மற்றும் தவத்திரு.தயானந்த சரசுவதி சுவாமிகள் அவர்களுடன் இளைய பட்டம் சுவாமிகள்





கர்நாடக மாநிலம் ஆதிசுஞ்சனகிரி திருமடத்து சுவாமிகளுடன் அடிகளார்




திங்கள், 24 ஜனவரி, 2011

இந்து சமய புத்தக கண்காட்சி

சென்னையில் 25.01.2011 முதல் 30.01.2011 வரை திருவான்மியூர் இராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அருள்மிகு சாந்தலிங்கர் நூல் உரைச்சாரம்


அருள்மிகு சாந்தலிங்க அடிகளார் அருளிய வைராக்கிய தீபம்,வைராக்கிய சதகம்,கொலை மறுத்தல்,அவிரோத உந்தியார் ஆகிய நான்கு நூல்களுக்கும் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் உரை எழுதியுள்ளார். யாழ்பாணம் ஆறுமுகநாவலர் அவர்களும் இந்நான்கு நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.சிதம்பர சாமிகளின் உரையினையொட்டி புலவர் சிவஞானம் அவர்கள் உரைச்சாரம் ஒன்றினை இயற்றியுள்ளார். அந்நூல் வெளியீட்டு விழா திருவள்ளுவராண்டு 2041 விக்ருதி வருடம் மார்கழித்திங்கள் 29ஆம் நாள் ( 13.01.2011 ) வியாழன் அன்று முற்பகல் 11 மணி அளவில் பேரூராதீன வளாகத்தில் சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகையின் முன்னிலையில் நடைபெற்றது.








இந்நூலின் புரவலர்களில் ஒருவரான திரு.மா.சங்கரன் ( அமெரிக்கா ) அவர்களின் சார்பாக அவரது தமையனார் திரு.மா.பாலசுப்பிரமணியம் அவர்கள் சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகை அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றார்.

இந்நூலின் புரவலரான திரு.பாலசுப்பிர மணியம் அவர்கள் நூலினை வெளியிட மங்கலப்பாளையம் ந.செல்லப்பன் அவர்கள் பெற்றுக் கொண்டார்


உலக வங்கியின் வேளாண்குழு மேனாள் உறுப்பினர் திரு.மா.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு சிறப்பு செய்யப்படுகின்றது.
நூலாசிரியர் புலவர்.சிவஞானம் அவர்களுக்கு பேரூரடிகளார் அவர்கள் சிறப்பு செய்கிறார்.
நூலாசிரியரின் கருத்துரை