சனி, 28 மார்ச், 2009

தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு

மேலைச்சிதம்பரமாம் திருப்பேரூரில் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் ஆதி குருமுதல்வர் அருள்மிகு சாந்தலிங்க அடிகளாரின் திருக்கோயில் குடமுழுக்கு விழா சீர்வளர்சீர் அடிகளாரின் சீரிய வழிகாட்டுதலின்படி மாசித்திங்கள் 24ஆம் நாள் ( 08.03.2009 ) ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச்சிறப்பாக அமைந்தது.விழாவில் அருளாளர்களும்,ஆதீன கர்த்தர்களும்,துறவிகளும்,அன்பர்களும் மிகத்திரளாகக் கலந்து கொண்டனர்.விழாவிலிருந்து சில புகைப்படங்கள்.

தவத்திரு.சிவலோகநாத அடிகள் தலைமையில் நிலத்தேவர் வழிபாடு



தவத்திரு.பொன் மாணிக்கவாசக அடிகளார் மூத்த பிள்ளையார் வழிபாட்டை நடத்துகிறார்



சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர அடிகளார்




தவத்திரு.முத்து சிவராமசாமி அடிகளார் ,தென்சேரி மலை ஆதீனம்




தவத்திரு.சுந்தர மூர்த்தி சுவாமிகள் மௌனமடம்,சிதம்பரம்




தவத்திரு.சாது சண்முக அடிகளார் ,பழனி ஆதீனம்



திருக்குடங்களில் திருவருள் சக்திகளை எழுந்தருளச் செய்தல்







திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா



திருமுறை மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராசருக்கு வழிபாடு



அருள்மிகு சாந்தலிங்கப் பெருமானுக்கு பேரொளி வழிபாடு

தவத்திரு.நாச்சியப்ப ஞான தேசிகர்,கோவிலூர் ஆதீனம்

வெள்ளி, 6 மார்ச், 2009

ஞானாம்பிகை நுழைவுரிமைப்பள்ளி 32ம் ஆண்டு விழா

நாள் : 06.03.2009
நேரம் : காலை 10.00 மணி


விழா : ஞானாம்பிகை நுழைவுரிமைப்பள்ளி திலகவதியார் மன்ற 32-ஆம் ஆண்டு விழா

Ø திருப்பூர் பார்க் கல்வி நிறுவன தலைவர் திருமதி. அனுசு இரமேசு மற்றும் உதகை திருமதி. பிரேமா ரவிபிரகாசு அவர்கள் திருவிளக்கேற்றி சிறப்பித்தார்கள்.
Ø பார்க் கல்வி நிறுவன தலைவர் திரு. இரமேசு அவர்கள் தலைமை ஏற்றார்.
Ø உதகை திரு. ரவிபிரகாசு அவர்கள் முன்னிலை வகித்தார்.

Ø பேரூராதீனம் இளையபட்டம் தவத்திரு.மருதாசல அடிகளார் அவர்கள் அருளுரை வழங்கி சிறப்பித்தார்

Ø கோவை நுழைவுரிமைப்பள்ளி ஆய்வாளார் திருமிகு.கே.காளியண்ணண் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
Ø தவத்திரு.விசுவராசரிசி பாலமகரிசி அவர்கள் மகிழ்வுரை வழங்கினார்.
Ø உதகை திரு.ஆ.தட்சிணாமூர்த்தி அவர்கள் மாணாக்கர்களுக்கு பரிசு வழைங்கினார்.
Ø இறுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பெண்கள் நடத்திய தமிழ் வேள்வி

நாள் : 06.03.2009
நேரம் : காலை 6.00 மணி

விழா : அருள்மிகு சாந்தலிங்க அடிகளார் திருக்கோயில் திருநெறிய தெய்வத்தமிழ்த்திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி பெண்கள் மட்டுமே நடத்திய இரண்டாம் கால வேள்வி வழிபாடு, திருமஞ்சன ஆகுதி, திரவிய ஆகுதி, நிறை ஆகுதி, மலர்வழிபாடு, திருமுறை விண்ணப்பம் பேரொளி வழிபாடு.



இளைய அடிகளாரின் வழிகாட்டுதலின்படி பன்னிரு திருமுறைகளை ஓதி வேள்வி வழிபாடுகளை செய்தனர்.

தற்செல்வப்பிரிவு கல்லூரி 20 ஆவது ஆண்டு விழா

நாள் : 05.03.2009
நேரம் : காலை 9.00 மணி

விழா : தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி (தற்செல்வப்பிரிவு) குமாரதேவர் மாணாக்கர் அருள்நெறி இலக்கியமன்ற 20ஆவது ஆண்டு விழா.
திருமதி.ருக்மணி ஓதிச்சாமி அவர்கள் திருவிழக்கேற்றி விழாவினைத் துவக்கி வைத்தார்
கல்லூரியின் வணிகவியல் துறை விரிவுரையாளர் முனைவர்.ம.செயப்பிரகாசம் அவர்கள் வரவேற்புரை நல்கினார்
பேரூராதீனம் இளையபட்டம் தவத்திரு.மருதாசல அடிகளார் அவர்கள் அருளுரை வழங்கி சிறப்பித்தார்

குருமுதல்வர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அருளிய கொலைமறுத்தல் என்ற நூலை இராமகிருட்டிண தபோவனம் தவத்திரு சங்கரானந்தா சாமிகள் வெளியிட்டு மதுக்கரை திரு.ஆர்.கிருட்டிணசாமி, கோவை திரு.சி.ஆர்.பாசுக்கரன் மற்றும் தென்சேரிமலை அறங்காவலர் குழு தலைவர் திரு.பி.என்.வேலுச்சாமி அகியோர்கள் பெற்றுக்கொண்டனர்.
குருமுதல்வர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அருளிய அவிரோத உந்தியார் என்ற நூலை ஈரோடு எசு.கே.எம். நிறுவனத்தலைவர் திரு. எசு.கே.எம்.மயிலானந்தம் அவர்கள் வெளியிட்டு கோவை ரூட்சு நிறுவனத்தலைவர் திரு.கி.இராமசாமி மற்றும் கோவை செந்தில் மணலகம் உரிமையாளர் திரு.ஓ.ஆறுமுகசாமி அகியோர்கள் பெற்றுக்கொண்டனர்.
இராமகிருட்டிண தபோவனம் தவத்திரு சங்கரானந்தா சாமிகள் மகிழ்வுரை நல்கினார்
மேனாள் துனைவேந்தர் முனைவர் திரு.சி.சுப்பிரமணியம் மற்றும் ஈரோடு எசு.கே.எம். நிறுவனத்தலைவர் திரு. எசு.கே.எம்.மயிலானந்தம் அகியோர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.
கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர்.கோ.ந.முத்துக்குமாரசாமி அவர்கள் நூல் கருத்துரை வழங்கினார்.
தென்சேரிமலை அறங்காவலர் குழு தலைவர் திரு.பி.என்.வேலுச்சாமி அவர்கள் கல்லூரி மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
வணிகவியல்துறை விரிவுரையாளர் திரு.கு.கிரீசுகிருட்டினன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்

வியாழன், 5 மார்ச், 2009

தாய்த்தமிழ்ப்பள்ளி இலக்கியமன்ற 10 ஆம் ஆண்டு விழா

நாள் : 05.03.2009
நேரம் : காலை 9.00 மணி

விழா : தவத்திரு ஆறுமுக அடிகளார் தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளியின் திருஞான சம்பந்தர் இலக்கிய மன்ற 10 ஆம் ஆண்டு விழா
திருமதி சௌந்திரவல்லி மூர்த்தி, திருமதி.பூர்ணிமா இலட்சுமண பிரபு அவர்கள் திருவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார்.
இரமேசு அயர்ன் நிறுவனத்தலைவர் திரு.பா.இலட்சுமண பிரபு அவர்கள் முன்னிலை வகித்தார்.
திருப்பூர் மில்லர் நிறுவனத் தலைவர் திரு.மில்லர் மூர்த்தி அவர்கள் தலைமை ஏற்றார்.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திரு.அழ.முத்து பழனியப்பன் அவர்க்ள சிறப்புரை வழங்கினார்.
திரு.மா.பாலசுப்ரமணி அவர்கள் மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பித்தார்.
திருப்பூர் திரு.கோபால், திருமதி.விசயமங்கை மாணவர்களுக்கு பின்னலாடை வழங்கினார்.
இறுதியாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பள்ளியில் 58 ஆம் அண்டு இலக்கிய மன்ற விழா

நாள் : 04.03.2009
நேரம் : மாலை 3.00 மணி

விழா : தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேனிலைப்பள்ளியின் மணிவாசகர் மாணவர் இலக்கிய மன்ற 58 ஆம் ஆண்டு விழா

திருமதி பிரியதர்சினி இரவிக்குமார் அவர்கள் திருவிளக்கேற்றி சிறப்பித்தார்.
மதுக்கரை கலைவாணி கல்வியியல் கல்லூரியின் தாளாளர் திரு.கி.ரவிக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்
பேரூராதீனம் இளையபட்டம் தவத்திரு.மருதாசல அடிகளார் அவர்கள் அருளுரை வழங்கி சிறப்பித்தார்
புலவர் திரு தியாகசீலன் அவர்கள் சிறப்புரை வழங்கினார்
திருமதி.சண்முகசுந்தரி கோபண்ண மன்றாடியார் அவர்கள் மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கினார்
இறுதியாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

புதன், 4 மார்ச், 2009

குடமுழுக்கு நிகழ்ச்சிகள்

மாசித்திங்கள் 20 ஆம் நாள்( 04.03.2009 ) புதன்கிழமை இரவு 8.00 மணி
தமிழ் வேள்வித் தலைமை :தவத்திரு.சிவலோக நாத அடிகள் அவர்கள்
திருவிளக்கு,புனிதநீர்,ஆனைந்து,மூத்த பிள்ளையார்,ஐம்பூத,திருமகள்,நிலந்தேவர்,புற்றுமண்,முளைப்பாலிகை வழிபாடுகள்,காப்பணிவித்தல்.

மாசித்திங்கள் 21 ஆம் நாள் ( 05.03.2009 ) வியாழக்கிழமை`,காலை 7.45 மணி
தலைமை : பீடம் தவத்திரு.பொன்மாணிக்க வாசக அடிகளார்
மூத்த பிள்ளையார் வேள்வி வழிபாடு
இரவு 8.00 மணி
தலைமை : தவத்திரு.குமரகுருபர அடிகளார்

திருக்குடங்களில் திருவருள் சக்திகளை எழுந்தருளச் செய்தல்,
முந்தை மாதவ பவத்தால் பரவு திருக்கோயிலிலிருந்து திருக்குடங்கள் வேள்விச்சாலைக்கு எழுந்தருளல்,உலகனைத்தும் விற்றளித்திட்டாலும் விலைமேவா பாசுரம் அளித்த கற்றவர் தொழுது ஏத்தும் வெற்புயர் தீபம் தந்த சாந்தலிங்கருக்கு முதற்கால வேள்வி,திருமஞ்சன ஆகுதி,திரவிய ஆகுதி,நிறை ஆகுதி,மலர் வழிபாடு,திருமுறை விண்ணப்பம்,பேரொளி வழிபாடு,அருட்திருநீறு வழங்குதல்.

செவ்வாய், 3 மார்ச், 2009

திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி திருப்பேரூர் ஆதீனம்

எல்லாம் உடையான் குருவாகி ஈங்குஎமது
அல்லல் அறுத்தான் என்று உந்தீபற
அவன்தாள் தொழுவாம் என்று உந்தீபற

வைராக்கிய சதகம் துறவியர் கருத்தரங்கம்

நாள் : மாசித்திங்கள் 23 ஆம் நாள்
நேரம் : முற்பகல் 10.00 மணி
திருவிளக்கேற்றல் : தவத்திரு.மதுரவல்லி அம்மை அவர்கள்,சென்னை
சிவசக்தி இலிதாம்பிகை அவர்கள்,பெங்களூரூ
தொடக்கவுரை : சத்குரு சக்கி வாசுதேவ் அவர்கள்,ஈசா யோகாமையம்
தலைமையுரை : தவத்திரு.கமலாத்மானந்தா அவர்கள்,மதுரை

கருத்துரை
தவத்திரு.ஆத்மானந்தா அவர்கள் ,காட்டுப்புத்தூர்.
தவத்திரு.தாம்பரானந்தா அவர்கள் குருசேத்திரம்
தவத்திரு.சுந்தரமூர்த்தி தம்பிரான் அவர்கள்,திருவாவடுதுறை
தவத்திரு.கிருட்டிணானந்தா சுவாமிகள் அவர்கள்,சேலம்
தவத்திரு. ததைவானந்தா சுவாமிகள் அவர்கள்,ஆனைமலை
சுவாமினி.சாம்பவி வித்யாம்பா சரசுவதி அவர்கள்,திருஈங்கோய்மலை
தவத்திரு.குகானந்த சுவாமிகள் அவர்கள்,திருப்பராய்துறை
தவத்திரு.சொரூபானந்தா சுவாமிகள்அவர்கள்,அமராவதிப்புதூர்
தவத்திரு. தேவானந்த சுவாமிகள்அவர்கள்,வேலூர்
தவத்திரு. அசீத் சைதன்யா அவர்கள்,சின்மயா வயல்
தவத்திரு. அபயானந்த சுவாமிகள்அவர்கள்அமிர்தானந்தமயி மடம்
தவத்திரு.செகநாத சுவாமிகள் அவர்கள் கோவை
தவத்திரு.விசயராகவ சுவாமிகள் அவர்கள்,மாதம்பட்டி
தவத்திரு. இராமானந்த சுவாமிகள்அவர்கள்,நந்தி கோயில்,நவக்கரை
தவத்திரு.நீலமலைச்சித்தர்அவர்கள்,கணுவாய்
தவத்திரு.சிவசண்முகசுந்தர பாபு சுவாமிகள்அவர்கள்,கோவை
தவத்திரு.ஈசுவரானந்தாசுவாமிகள்அவர்கள்,சித்திரைச்சாவடி
தவத்திரு. இராமலிங்க சுவாமிகள்அவர்கள்,பதுவம்பள்ளி
தவத்திரு. இராசுஅடிகள் அவர்கள்,சிவானந்தகுடில்
தவத்திரு.அபயானந்தசரசுவதி சுவாமிகள்அவர்கள், சேலம்
தவத்திரு.கதிர்வேல்அடிகள் அவர்கள்,புரவிபாளையம்
தவத்திரு.திருப்புகழ்அடிகள் அவர்கள்,அன்னூர்
தவத்திரு.வித்யானந்தாஅவர்கள்,வடவள்ளி
தவத்திரு.சிவ குப்புசாமிசுவாமிகள்அவர்கள்,இளையான்குடி
தவத்திரு.குமாரசாமி தம்பிரான்அவர்கள்,மேலமங்கலம்
தவத்திரு.சிவஞான தேசிக அடிகளார் அவர்கள்,உளுந்தூர்பேட்டை
தவத்திரு.கேசவானந்தாஅவர்கள்,பள்ளிபாளையம்
தவத்திரு.சொரூபானந்தாஅவர்கள்,விருதுநகர்
தவத்திரு.சிவானந்த சுவாமிகள்,திருமழபாடி
தவத்திரு.ஞானசிவாச்சாரியார் சுவாமிகள்,பேரூர்
தவத்திரு.பிரணவானந்தா சுவாமிகள்,இராமேசுவரம்
தவத்திரு.காமாட்சிதாச சுவாமிகள்,அவிநாசி





திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா



அருள்நலம் சான்றோரே,
வளம்சேர் புகழ்பெற்ற கொங்குவள நாட்டில்'' மீ கொங்கில் அணி காஞ்சிவாய்ப் பேரூர்''எனப்போற்றப்படும் திருத்தலம் திருப்பேரூர்.மேலைச்சிதம்பரம்,பிறவாநெறி என்னும் பெயர்களுடன் விளங்குவது.
பட்டிமுனி,கோமுனி,சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இறைவன் அருட்காட்சி நல்கிய திருத்தலம்.இத்தகைய சிறப்புப்பெற்ற திருத்தலத்தில் 17 ஆம் நூற்றாண்டில் சீலத்தவர் போற்றத் திருமடம் அமைத்து அடியவர்களுக்கு ஞான நெறி காட்டியவர் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி திருப்பேரூராதீன ஆதிகுரு முதல்வர் அருள்மிகு சாந்தலிங்க அடிகளார் ஆவார்.உலகம் உய்யும் பொருட்டு கொலை மறுத்தல்,வைராக்கிய சதகம்,வைராக்கிய தீபம்,அவிரோத உந்தியார் என்னும் நான்கு அருள்நூல்களை அருளிச்செய்தார்.அத்தகைய பெருமானுக்குச் சிறப்பான முறையில் திருக்கோயில்,மண்டபம்,இராச கோபுரம் அமைத்ததோடு அருள்மிகு அம்பலவாணப் பெருமானுக்கும் திருக்கோயில் எழுப்பப் பட்டது.திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 1973 ஆம் ஆண்டு சிறப்பாக நடை பெற்றது.அதைத் தொடர்ந்து 2வது,3ஆவது திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாக்கள் செய்யப்பட்டன.அம்பலவாணப் பெருமானின் திருவருளாலும் குருவருளாலும் அன்பர்களின் ஒத்துழைப்பாலும் திருக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு வண்ணம் தீட்டிப் பொலிவூட்டப்பட்டுள்ளது.
நிகழும் திருவள்ளுவராண்டு 2040 சர்வதாரி ஆண்டு மாசித்திங்கள் 24 ஆம் நாள் ( 08.03.2009 ) ஞாயிற்றுக்கிழமை பன்னிரெண்டாம் வளர்பிறையும்,பூச உடுவும் இடப ஓரையும் கூடிய நன்னாளில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளது.இதனையொட்டி ஆறு கால வேள்வி வழிபாடு,கல்விநிலையங்களின் ஆண்டுவிழாக்கள்,குருபூசை விழா,சத்வித்யா சன்மார்க்க சங்க 93ஆம் ஆண்டுவிழா,கருத்தரங்குகள்,நூல் வெளியீட்டு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.அன்பர்கள் அனைவரும் இவ்வினிய விழாக்களில்
பங்குகொண்டு அருள்மிகு அம்பலவாணப் பெருமான் தண்ணருளும் அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் திருவருளும் குருவருளும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
வேண்டும் தங்களன்பு
சாந்தலிங்க இராமசாமி அடிகள்
பேரூராதீனம்,பேரூர்
கோவை.

திங்கள், 2 மார்ச், 2009

ஈழத் தமிழருக்காக அருளாளர்களின் உண்ணாநோன்பு

01.03.2009 ஞாயிறு அன்று கோவையில் தவத்திரு.மருதாசல அடிகளார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற உண்ணாநோன்பு.



கௌமாரச்செல்வி.மரகதம் அவர்கள்