புதன், 14 ஜனவரி, 2009

பொங்கல் வாழ்த்து

சாந்தலிங்கர் தாண்மலர் வாழ்க
பேரூரடிகளாரின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உழுகின்ற உழவர் வாழ்க்கை உயர்ந்திடக் கலைமேலோங்கி
எழுந்திட அறமும் பண்பும் இசைந்திட இளையோர் கூட்டம்
செழுந்தமிழ் மரபு பேணி செந்நெலும் கரும்பும் இஞ்சி
தழுவிடும் பொங்கல் நாளில் சான்றோர்கள் வாழ்த்த வாழ்க

கேட்டினை தரும் கடல்கோள் கிளர்ந்த தீவினைகள் மாறி
வீட்டினில் பொலியும் பொங்கல் மெலிந்தவர்க்கு உதவும் பொங்கல்
நாட்டினில் பண்பும் அன்பும் நயந்திடுந் தமிழால் பண்ணால்
பாட்டிசைத்து இனிது வாழும் பாங்கினை தருக பொங்கல்.

வேண்டும் தங்கள் அன்பு

அன்புள்ள
சாந்தலிங்க இராமசாமி அடிகள்
,
பேரூர், கோயம்புத்தூர்.641 010.

சனி, 10 ஜனவரி, 2009

குரு பூசை

ஆதீனக் கோவிலில் நடந்த குருபூசை விழா
ஊட்டி காந்தள் மடத்தில் இளைய அடிகள் நடத்தி வைத்த
திருக்கல்யாண உற்சவம்




rmadam

திங்கள், 5 ஜனவரி, 2009

வகுப்பறை நிதிஉதவி



இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்- பாரதியார்.
நமது கல்லூரிக்கு தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நினைவாக இரண்டு வகுப்பறைகள் கட்ட ரூபாய் மூன்று இலட்சத்து அறுபதாயிரம்( 3,60,000 ) வழங்கிய சரசுவதி அம்மாள் அவர்களுடன் இளைய அடிகளார்.

சனி, 3 ஜனவரி, 2009

அழைப்பிதழ்

திருவாதிரைஅருள்மிகு அம்பலவாணர் திருமஞ்சனம்

தவத்திரு மாணிக்க அடிகளார் குருபூசை

அழைப்பிதழ்

மெய்யன்புடையீர்,

வணக்கம். அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் இன்னருள் பெருகுக. நிகழும். சர்வதாரி ஆண்டு திங்கள் 26 ஆம் நாள் (10.01.2009) சனிக்கிழமை முற்பகல் 10 மணி முதல் அருள்மிகு அம்பலவாணர் திருமஞ்சனமும்,தவத்திரு மாணிக்க அடிகளார் குருபூசை விழாவும் நடைபெற உள்ளன.அனைவரும் கலந்து கொண்டு அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் தண்ணருளும் அருள்மிகு அம்பலவாணப் பெருமான் இன்னருளும் குருவருளும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

வேண்டுந்தங்களன்பு

சாந்தலிங்க இராமசாமி அடிகளார்,

பேரூராதீனம்.பேரூர்.கோவை - 641010.

இங்ஙனம் விழாக்குழுவினர்

ஆதி குரு முதல்வர்


தவத்திரு.சாந்தலிங்க இராமசாமி அடிகளார்