புதன், 14 ஜனவரி, 2009

பொங்கல் வாழ்த்து

சாந்தலிங்கர் தாண்மலர் வாழ்க
பேரூரடிகளாரின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உழுகின்ற உழவர் வாழ்க்கை உயர்ந்திடக் கலைமேலோங்கி
எழுந்திட அறமும் பண்பும் இசைந்திட இளையோர் கூட்டம்
செழுந்தமிழ் மரபு பேணி செந்நெலும் கரும்பும் இஞ்சி
தழுவிடும் பொங்கல் நாளில் சான்றோர்கள் வாழ்த்த வாழ்க

கேட்டினை தரும் கடல்கோள் கிளர்ந்த தீவினைகள் மாறி
வீட்டினில் பொலியும் பொங்கல் மெலிந்தவர்க்கு உதவும் பொங்கல்
நாட்டினில் பண்பும் அன்பும் நயந்திடுந் தமிழால் பண்ணால்
பாட்டிசைத்து இனிது வாழும் பாங்கினை தருக பொங்கல்.

வேண்டும் தங்கள் அன்பு

அன்புள்ள
சாந்தலிங்க இராமசாமி அடிகள்
,
பேரூர், கோயம்புத்தூர்.641 010.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக