புதன், 14 அக்டோபர், 2009

சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகையின் 86 வது நாண்மங்கல விழா

14.10.2009 அன்று புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு சீர்வளர்சீர் பேரூரடிகளார் அவர்கள் அடியார் பெருமக்களுக்கும்,அன்பர்களுக்கும்,மகளிர்களுக்கும்,குழந்தைகளுக்கும் புத்தாடை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
10மணி அளவில் மகம்நாள் வேள்வி வழிபாடு,சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகையின் அருளார்ந்த தலைமையில் நடைபெற்றது.
10.30 மணி அளவில் அருள்மிகு சாந்தலிங்கப்பெருமானுக்கு பெருந்திருமஞ்சன வழிபாடு
11.30மணி அளவில் அலங்கார வழிபாடு,பேரொளி வழிபாடு நடைபெற்றது.
நண்பகல் 12.30 மணிஅளவில் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் சீர்வளர்சீர் கயிலைக்குருமணி அவர்களின் நாண்மங்கல விழா வழிபாடு அடியார் பெருமக்கள் புடைசூழ இனிதே நடைபெற்றது.
பங்குபெற்ற அருளாளர்கள் ;
சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர அடிகளார்
பழனி சாதுசாமிகள் திருமடம் தவத்திரு.சாதுசண்முக அடிகளார்
தென்சேரிமலை திருநாவுக்கரசர் திருமடம் தவத்திரு.முத்துசிவராமசாமிஅடிகளார்
வராகி பீடம் தவத்திரு.மணிகண்ட அடிகள்
சின்மயா மிசன் அசித் சைதன்யா அவர்கள்
மற்றும் தொழிற்சார் நிறுவனத் தலைவர்கள்,மற்றும் சிவனடியார்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.














குருமகா சந்நிதானம் சிவனடியார்களுக்குச் சிறப்பு செய்கிறார்


புனித காணிக்கை அன்னை திருச்சபையைச் சேர்ந்த சகோதரிகளின் அன்புக் காணிக்கை

வெள்ளி, 9 அக்டோபர், 2009

நாண்மங்கல விழா அழைப்பிதழ்

திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் சீர்வளர்சீர் கயிலைக்குருமணி அவர்களின் நாண்மங்கல விழா அழைப்பிதழ்





பேரன்புடையீர்,
அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் இன்னருள் பெருகுக. மகம் நாள் வழிபாடும், சைவமும் தமிழும் தழைத்தோங்கப் பணி செய்யும் பேரூரடிகளாரின் 86 ஆம் நாண்மங்கல விழா திருவள்ளுவராண்டு 2040 புரட்டாசி 28 ஆம் நாள் (14.10.2009) புதன்கிழமை அன்று முற்பகல் திருமடத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு திருவருளும் குருவருளும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.


இங்ஙனம்
விழாக்குழுவினர்.

வியாழன், 8 அக்டோபர், 2009

உலக பார்வை தினம்

கோயம்புத்தூரில் உலக பார்வை தினத்தை முன்னிட்டு காந்திபுரத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் அடிகளாருடன் விஜயா பதிப்பகம் திரு.வேலாயுதம் அவர்களும் அமைப்பாளர்களும்






வெள்ளி, 2 அக்டோபர், 2009

தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் தலைவரும்,உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் துணைத் தலைவரும் திருமடத்தோடு நீண்டகாலத் தொடர்புடையவருமான திரு.வா.செ.குழந்தைசாமி அவர்கள் "பாரதிதாசன் விருது " பெற்றமைக்காக வாழ்த்துப் பெறுகிறார்.



திங்கள், 21 செப்டம்பர், 2009

தென்கயிலாய தவநெறிச்சாலை

குறிஞ்சி நிலமான சிறுவாணி மலைஅடிவாரத்தில் வெள்ளியங்கிரி எனும் புண்ணியத்தலத்தின் கீழாக



நல்லூர்பதிவயல் எனும் கிராமத்தில் நெல்லிமரம் சூழ்ந்த வனத்தில்






தென்கயிலாய தவநெறிச்சாலை திறப்புவிழா












பாண லிங்கத்திற்கு திருக்குட நன்னீராட்டு










சீர்வளர்சீர் அடிகளாருடன்,கௌமார மடம் குமரகுருபர அடிகள்,பழனி சாதுசாமிகள் திருமடத்தின் சாதுசண்முக அடிகள்,சிதம்பரம் மௌனமடம் ஆதீனகர்த்தர்

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார்

திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூர் ஆதீனம்
கயிலைக்குருமணி சீர்வளர்சீர்.சாந்தலிங்க இராமசாமி அடிகளார்






சனி, 12 செப்டம்பர், 2009

இலண்டன் சைவ மாநாட்டு நிகழ்ச்சிநிரல்

நிகழ்ச்சி நிரல்
12.09.2009 , சனிக்கிழமை
9.00 காலை பூசை
9.20 மங்கல விளக்கேற்றல் திருமதி.ச.ஆனந்தி கருணைலிங்கம்
9.25 நந்திக்கொடி ஏற்றல்
9.35 திருமுறை ஓதுதல்
10.00 வரவேற்புரை ; திரு.தேவராஜன்
தலைவர் கனகதுர்க்கை அம்மன் கோயில்,ஈலிங்.
10.05 ஆசிஉரை; சிவஸ்ரீ பாலகுமார குருக்கள்
கனகதுர்க்கை அம்மன் கோயில்,ஈலிங்
10.10 தலைமை உரை;சோதிலிங்கம்
தலைவர்,சைவத்திருக்கோயில்கள் ஒன்றியம்
10.15 சுந்தரர் அரங்கம்
மு.நித்யானந்தன்,
பொருளாளர்,அச்வே முருகன் கோயில்
10.20 மலர் வெளியீடு; திரு.நாவரசன்
முதல்பிரதி வாங்குபவர் ;திரு.சிவசுந்தரம்
10.35 சிறப்புரை; திரு.ராஜி பரமகுரு.
உலக சைவப்பேரவை கிளை இலண்டன்
10.40 செயலாளர் உரை; க.வி.கணேசமூர்த்தி
செயலாளர் சைவத்திருக்கோயில்கள் ஒன்றியம்
10.35 சிறப்புரை; திரு.இளசை சுந்தரம்
நகைச்சுவை மன்னர்,தமிழ்நாடு
11.35 சிறப்புரை; திரு.க.நீலகண்டன்,
யாழ்ப்பாணம்
11.50 சிறப்புரை; திரு. சங்கர்
12.00 பேருரை; தவத்திரு.மருதாசல அடிகளார்
பேரூர் ஆதீனம் தமிழ்நாடு
12.40 மகேஸ்வர பூசை

போட்டிகளில் வெற்றிபெற்ற பிள்ளைகளின் திருமறை
ஓதுதல்,பேச்சுக்கள்,மற்றும் பரிசு வழங்குதல்
திரு. ஸ்ரீரங்கன்,திரு.கருணைலிங்கம் இணைந்து நடத்துதல்
14.30 உரை- நமது சமயமும் வாழ்வும் – செல்வன்.ஹரிசுதன்
ராயல் கல்லூரி மாணவன்,கொழும்பு
14.35 சேக்கிழார் அரங்கம் தலைமை திரு.மகேஸ்வரன்
14.45 சிறப்புரை திரு.தங்கரத்தினம்
சைவப்புலவர்,ஜெர்மனி
14.55 சிறப்புரை திரு.குணசிங்கம்,தலைவர்
இராசஇராசேசுவரி அம்மன் கோயில்
15.05 சிறப்புரை திரு.தமிழருவி மணியன்,தமிழ்நாடு
15.50 சிறப்புரை திரு.தம்பு கலசம் பத்திரிக்கை
16.00 தேநீர் இடைவேளை
16.15 இளைஞர் அணி தலைமை திரு.சி.கணேஸ்குமார்
1) பா.பரந்தாமன் 2) தெ.நிஜந்தன் 3)ஜெ.கஜநாத்
4)ரி.கீதன் 5)மோ.தயாளினி 6) ரா.அஞ்சனா
17.30 நம்பி ஆண்டார் நம்பி அரங்கம்
தலைமை திரு.ஸ்ரீஸ்கந்தராசா
17.40 சிறப்பு சொற்பொழிவு திரு.இளசை சுந்தரம்
18.20 சிறப்புரை சிவஸ்ரீ.பா.வசந்தன் குருக்கள்
18.30 சிறப்புரை திரு.தர்சன்,விரிவுரையாளர்,யாழ்பாணம்
18.40 சிறப்புரை திரு.சுந்தரலிங்கம், குரோளி அம்மன் கோயில்
18.50 சிறப்புரை திருமதி.சுகன்யா
19.00 சிறப்புரை திரு.மனோகரன்
உலக சைவப்பேரவை,இலண்டன் கிளை
19.10 சமயம் சார்ந்த கேள்வி பதில்
தவத்திரு.மருதாசல அடிகளார்,திரு.இளசை சுந்தரம்,
திரு.தமிழருவி மணியன்,திரு.இராஜமனோகரன்
19.50 நன்றி உரை.திரு.ஸ்ரீரங்கன்
செயலாளர்,கனகதுர்க்கை அம்மன் ஆலயம்
20.00 நந்திக்கொடி இறக்கம்
இராப்போசனம்.
நிகழ்ச்சி நிரல்
13.09.09 ஞாயிற்றுக்கிழமை
9.00 காலைப்பூசை
9.20 மங்கல விளக்கேற்றல் – திருமதி.ஞானஸ்வரி வைரவமூர்த்தி
9.25 நந்திக்கொடி ஏற்றல்
9.35 திருமறை ஓதுதல்
9.55 வரவேற்ப்புரை வயிரவ மூர்த்தி,தலைவர் ஆச்வே முருகன் ஆலயம்
10.00 ஆசி உரை சிவஸ்ரீ.சுரேஸ்வர குருக்கள்
ஆச்வே முருகன் ஆலயம்
10.05 தலைவர் உரை.சோதிலிங்கம்,தலைவர்
பிரித்தானிய சைவத்திருக்கோயில்கள் ஒன்றியம்
10.10 தங்கம்மா அப்பாக்குட்டி அரங்கு
தலைமை திரு.நித்தியானந்தன்
பொருளாளர்,ஆச்வே முருகன் கோயில்
10.15 மாநாட்டு மலர் மற்றும் தங்கம்மா அப்பாக்குட்டி நூல் வெளியிடுதல்
திரு.நீலகண்டன்,யாழ்ப்பாணம்
10.40 சிறப்புரை திரு.பாலசிங்கம்,தலைவர் சைவமுன்னேற்றச் சங்கம்
10.50 செயலாளர் உரை திரு.கணேசமூர்த்தி
செயலாளர்,சைவத்திருக்கோயில்கள் ஒன்றியம்
11.00 பேருரை.தவத்திரு.மருதாசல அடிகளார்
பேரூர் ஆதீனம், தமிழ்நாடு
11.30.சிறப்புரை.திரு.தமிழருவி மணியன்,தமிழ்நாடு
12.10 சிறப்புரை திரு.சிதம்பரப்பிள்ளை
அறங்காவலர்,சைவ முன்னேற்றச் சங்கம்
12.20 சிறப்புரை திரு.இராஜ மனோகரன்
12.40 மகேஸ்வர பூசை
13.30 போட்டிகளில் வெற்றிபெற்ற பிள்ளைகளின் திருமுறை
ஓதுதல், பேச்சுக்கள்,பரிசு வழங்குதல்
தலைமை.திரு.யோகநாதன்
13.40 மகளிர் அரங்கம் தலைமை; தமிழரசி
கருப்பொருள்
திருமதி.கீதா மகேஸ்வரன் – பிரித்தானிய சிவன் கோயில்களுக்கான
வழிமுறை
திருமதி.பிரேமா முரளிதரன் – பெண் அடியார்கள்
திருமதி. சந்திரவதனி -
திருமதி.விஜயதர்சினி ஜோதிராஜா
திருமதி.நா.யோகநாதன்
15.40 அநபாயச்சோழன் அரங்கம்
தலைமை திரு.சிவக்குமார்
15.50 சிறப்புரை திரு.குமுதன் ஸ்ரீஸ்கந்தராசா
16.00 சிறப்புரை திரு.சிவானந்தன் சைவப்புலவர்
16.10 சிறப்புரை திரு.லாவண்யா கிருஸ்ணானந்த ராஜா
16.20 சிறப்புரை சிவஸ்ரீ நாகநாத குருக்கள் அருள்மிகு முருகன் ஆலயம்
16.30 சிறப்புரை திரு.இராச சுந்தரம்
16.40 சிறப்புரை திரு.சிவப்பிள்ளை
16.55 சிறப்புரை திரு.தேவசகாயம்
17.05 சிறப்புரை திரு.நமசிவாயம்
17.25 சிறப்புரை திரு.இளசை சுந்தரம் தமிழ்நாடு
18.05 சிறப்புரை திரு.தமிழருவி மணியன்
18.35 கேள்வி பதில்
தவத்திரு.மருதாசல அடிகளார்,திரு.இளசை சுந்தரம்,
திரு.தமிழருவி மணியன்.திரு.இராஜ மனோகரன்
19.30 நன்றிஉரை திரு.கருணை லிங்கம்
பொருளாளர், சைவதிருக்கோயில் ஒன்றியம்
19.40 நந்திக்கொடி இறக்கம்
20.00 இராப்போசனம்

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

அறக்கட்டளை சொற்பொழிவு

சீர்வளர்சீர் அடிகளாரின் அருளாட்சி வெள்ளிவிழாக்குழு அறக்கட்டளை சொற்பொழிவிற்காக நமது தமிழ்கல்லூரிக்கு 31.08.2009 அன்று செஞ்சொற்கலைஞர் திரு.சிவக்குமார் அவர்கள் வந்திருந்தார்.





சங்கத்தமிழ் முதல் கவியரசு தமிழ் வரை எனும் தலைப்பில் உரையாற்றினார்





சனி, 22 ஆகஸ்ட், 2009

தூத்துக்குடி சைவசித்தாந்த சபை

9.08.2009 அன்று நடந்த தூத்துக்குடி சைவசித்தாந்த சபையின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவில் அடிகளார்







வியாழன், 20 ஆகஸ்ட், 2009

இலண்டன் சைவ கருத்தரங்கம்

போற்றி ஓம் நமசிவாய

Founder Temples: Shree Ghanapathy Temple, London Sivan Kovil, Shri Kanaga thurrkkai Amman Temple, Highgate Hill Murugan Temple, Sri Rajarajeswary Amman temple - Associated Temples :Sree Karpaga Vinayagar Temple, Walthamstow, Crawley Sri Swarna Kamadchy Amman Temple


பிரித்தானிய சைவ திருக்கோயில்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள 12ஆவது சைவ கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இளைய அடிகளார் இலண்டன் மாநகருக்கு வருகை தர உள்ளார்.செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் நடக்கும் இவ்விழாவிற்க்கு வருகை தரும் அடிகளார் அங்குள்ள தமிழர் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.தமிழ்,வழிபாட்டில் தமிழ்,திருக்குறள்,சமயம்,யோகம் பற்றிய கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.எனவே இந்தச் செய்தியை அருகிலுள்ள தமிழர்கள்,தமிழ்ச்சங்கங்களுக்கு தெரியப்படுத்தி அவரது வருகையை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

பன்னிரு திருமுறை விழா

மயிலை கபாலீசுவரர் திருக்கோவிலில் நடந்த திருமுறை விழாவில்



ஆறாம் திருமுறையாம் திருநாவுக்கரசர் தேவாரத்தின் பெருமைகளைப் பற்றி



அடிகள் பெருந்தகையின் சொற்பொழிவு

சனி, 15 ஆகஸ்ட், 2009

தென்கயிலாய தவநெறிச்சாலை

கொங்கு நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் முதன்மையானது வெள்ளிவெற்பு, தென்கயிலை எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரித் திருத்தலம். இம்மலைச்சாரலில், கோவை,சிறுவாணி நெடுஞ்சாலையில் ( நல்லூர்பதி வயல் )தென்கயிலைத் தவநெறிச்சாலை அமைதியான இடந்நில்,நாலாயிரம் சதுரடியில் வழிபாட்டு மண்டபம்,பயிற்சியாளர்கள் தங்கும் அறைகள்,கருத்தரங்கு அறையாதியன பேரூராதீனத்தின் சார்பாக உருவாகியிருக்கின்றன.

திருநெறிய வழிபாட்டுப்பயிற்சி,தியானம்,கூட்டுவழிபாடு,சிற்றூர்மக்களிடையே வாழ்வியல்,அருளியல் நெறிகளுக்கு வழிகாட்டுபவர்களுக்குப் பயிற்சியாதியனவற்றை பரப்புதற்கான தொண்டர்களை உருவாக்கும் நெறிமுறைகளைத் தருவதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

தென்கயிலைத் தவநெறிச்சாலைத் திறப்புவிழா,பாணலிங்கம் நிறுவுதல் நிகழ்வுகள் நிகழும் திருவள்ளுவராண்டு 2040 ஆவணித்திங்கள் 16,17 ( 01,02.09.09 )செவ்வாய்,புதன் அன்று நடைபெறுகின்றன.அருள்நெறியாளர்கள் பங்குகொண்டு திருவருளுக்கு உரியவர்களாகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சத்வித்யா சன்மார்க்க சங்கம்,
சாந்தலிங்கர் திருமடம்,
பேரூராதீனம்,பேரூர்,
கோவை.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

அருள்மிகு.சாந்தலிங்க அடிகளார் வரலாறு

அருள்மிகு சாந்தலிங்க அடிகள் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி திருப்பேரூர் ஆதீனத்தின் ஆதிகுரு முதல்வராக விளங்கியவர். தொண்டை நாட்டில் தோன்றிய இவரது காலம் 17ஆம் நூற்றாண்டு என்பர். திருக்கயிலாயப் பரம்பரையில் சீரும்,சிறப்பும் பெற்ற திருவாவடுதுறை ஆதீனநிறுவனர் பஞ்சாக்கரதேசிகர் அவர்களின் மாணாக்கராகவும், அவ்வாதீனத்தின் இரண்டாம் பட்டமாகவும் விளங்கித் திருவண்ணாமலை ஆதீனத்தை நிறுவிய துறையூர் சிவப்பிரகாசரைக் குருவாகப்பெற்றவர் சாந்தலிங்கர்




தமிழகத்தில் அயலவர்தாக்கம் நுழைந்து பிறசமயங்களை வளர்க்கும் அமைப்புகள் தோன்றிய காலத்தில் சைவ சித்தாந்த உண்மைகளைத் திருமுறை வழியில் விளக்குவதற்குரிய வழியினை அருளாளர்கள் மேற்கொண்டனர். அவ்வாறு தொடங்கப்பெற்ற மரபே “திருக்கயிலாயமரபு “ எனத்தோற்றம் பெற்றது.
கயிலைநாதரே இம்மரபுக்கு முதல்வர் ஆவார். கயிலைநாதர் சைவசித்தாந்தச் செம்பொருளைத் தனது மாணாக்கராகிய நந்தியெம்பெருமானுக்கு அருளிச் செய்கிறார். அவ்வுண்மையினை நந்தியெம்பெருமான் தனது மாணாக்கர் சனற்குமாரமுனிவர்க்கு அருளிச் செய்தார். சனற்குமாரர் தமது முதல் மாணவராக விளங்கிய சத்திய ஞானதரிசினிகளுக்குச் செம்பொருளை அருளிச் செய்தார். அவர் அச்செம்பொருளின் நுட்பத்தைப் பரஞ்சோதி முனிவருக்கு அருளினார். இம்மரபு “திருக்கயிலாய அகச்சந்தான மரபு ” எனப் போற்றப் பெறுகிறது.


இதனைத் தொடர்ந்து உருவாகிய புறச்சந்தான மரபில் முதலில் தோன்றியவர் மெய்கண்டார்.இவர் நடுநாட்டில் உள்ள பாடல்பெற்ற தலமாகிய திருப்பெண்ணாகடம் எனும் தலத்தில் அச்சுதக்களப்பாளர் எனும் பெரியாருக்கு தோன்றியவர். இவரது இளமைப்பெயர் திருவெண்காட்டுநம்பி. குழந்தைப் பருவத்தில் சிறுதேர்உருட்டி விளையாடிக்கொண்டிருந்த காலத்தில் வான்வழி வந்த பரஞ்சோதியார் உண்மைப்பொருளை அகத்தால் இனிதுநோக்கி நம்பிக்கு அருளினார்.அன்றுமுதல் திருவெண்காட்டுநம்பி “மெய்கண்டார்” ஆனார்.
இவரது தத்துவஞானத்தையுணர்ந்த அச்சுதக்களப்பாளரின் குலகுரு சகலாகமபண்டிதர் தமக்கு மெய்ப்பொருள் உணர்த்த வேண்டினார். மெய்கண்டாரும் அவரது விருப்பத்திற்கேற்ப மெய்ப்பொருளை உணர்த்தினார். இவரே அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். மெய்கண்டார் சிவஞானபோதம் என்ற நூலை அருளினார். அந்நூற்பொருளை எளிமைப்படுத்தி அருணந்தியார் சிவஞான சித்தியார் என்ற நூலை அருளினார். இவரின் மாணாக்கர் மறைஞான சம்பந்தர். இம்மறைஞான சம்பந்தரின் அருள்மாணாக்கர் கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார். இவர் மெய்கண்ட சாத்திரங்களுள் எட்டு நூல்களை ( சித்தாந்த அட்டகம் ) அருளிய பெருமைக்குரியவர்.



இவர் வழிவந்த அருள்நமச்சிவாயரின் வழி மாணாக்கரே திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய நமசிவாயமூர்த்திகள் எனப்படும் பஞ்சாக்கர தேசிகர். இவ்வாதீனத்தின் இரண்டாம் பட்டமாக விளங்கியவர் ஆதிசிவப்பிரகாசர். இவரே தமிழகத்தில் வீரசைவ ஆதீனத்தைச் சைவசிந்தாந்தமரபில் தோற்றுவித்த பெருமைக்குரியவராவர். திருவண்ணாமலையிலும், துறையூரிலும் ஆதிசிவப்பிரகாசர் ஆதீனத் தலைவராகப் பொறுப்பேற்றுச் சமயப்பணியாற்றி வந்தார். அக்காலத்தில் சாந்தலிங்கர் சிவப்பிரகாசரது தவவலிமையும்,அருட்பொலிவும் சீலத்தவரால் போற்றுவதைக் கேள்வியுற்றுத் திருவண்ணாமலைத் திருமடத்தை அணுகி குருநாதரை வணங்கி அவரைச் சிவமாகவே கண்டு வியந்தார். சிவப்பிரகாசர் சாந்தலிங்கரது நிலையுணர்ந்து “ வீரசைவ தீக்கை “ அளித்து தமக்கு அணுக்கராக ஏற்றுக்கொண்டார். அங்கு கற்பனைக்களஞ்சியம் துறைமங்கலம் சிவப்பிரகாசர் நட்பு சாந்தலிங்கருக்குக் கிட்டியது.
தனது குருநாதரின் அருட்கட்டளையின் வண்ணம் சாந்தலிங்கப் பெருமான் கொங்குவள நாட்டில் உள்ள பிறவாநெறித் தலமாகிய பேரூரை அடைந்து பட்டிப்பெருமான் திருவடிநிழலில் திருமடம் அமைத்து பல அருட்பணிகளை ஆற்றிவந்தார். பொம்மபுரம் சிவஞான பாலய சுவாமிகளின் திருவருட் குறிப்பின்படி சிவப்பிரகாச சுவாமிகளின் தங்கை ஞானாம்பிகையம்மையை சாந்தலிங்கர் திருமணம் செய்துகொண்டார். பின்னர் சாந்தலிங்க சுவாமிகள் ஞானாம்பிகையாருடன் பேரூர்க்கு எழுந்தருளி திருமடத்திலிருந்து அடியவர்களுக்கு நல்வழி காட்டிவந்தார். ஞானாம்பிகையார் முதிர்ந்த அறிவோடு இல்லற நெறியில் நின்று அருட்பணிகளில் ஈடுபட்டார்.
சாந்தலிங்கப்பெருமான் மக்கள் உய்யும் பொருட்டுக் கொலைமறுத்தல், வைராக்கிய சதகம்,வைராக்கிய தீபம்,அவிரோத உந்தியார், என்னும் நூல்களை அருளிச்செய்தார். இவை முறையே சீவகாருணியத்தையும்,ஈசுவர பக்தியையும்,பாச வைராக்கியத்தையும்,பிரம்ம ஞானத்தையும் உணர்த்துவன.
மாணாக்கர் பலர் நம் குருமுதல்வர் துறவுநெறியை வற்புறுத்தும் நூல்களை அருளியும்,அவற்றை நமக்குப் போதித்தும் தாம் மட்டும் இல்லறநெறியில் இருக்கின்றாரே என்று மனத்தில் எண்ணினர். அதையுணர்ந்த அடிகள் ஒருநாள் தம் துணைவியாராகிய ஞானாம்பிகையாரை உடனிருத்திப் பாடம் சொன்னார். அப்போது சாந்தலிங்கரும் அம்மையாரும் மாணாக்கருக்கு கயிலைநாதரும்,உமையம்மையுமாக காட்சியளித்தனர். இக்காட்சியைக் கண்ட மாணாக்கர் தாழ்ந்து பிழைபொறுக்க வேண்டினர். இந்நிகழ்வினையடுத்துச் சாந்தலிங்கர் முழுத்துறவு பூண விரும்பினார். இதற்கு இறைவனது திருவுள்ளக்குறிப்பையும் அறிய எண்ணினார். “இன்று யாம் திருவமுது ஏற்கப் புறப்படுகிறோம்,முதலில் பாலன்னம் கிடைக்குமானால் முழுத்துறவு நெறியில் நிற்ப்போம் ” என்கிறார். திருவருளும் அவ்வாறே இருந்தது. அன்றுமுதல் இல்லறம் நீங்கிய துறவியாகிறார். ஞானாம்பிகையார் திருவண்ணாமலை சென்று பெரியமடத்தில் தங்கிச் சமயப்பணி ஆற்றி இறையருள் பெற்றார். அந்த இடம் ஞானாம்பிகை பீடமாக திருமடத்தின்முகப்பில் பலருக்குக் குலதெய்வமாக விளங்குகிறது.
குமாரதேவர் எனும் கன்னடஅரசர் ஞானகுருவைத் தேடிப் பல தலங்களுக்கும் வந்தவர் திருப்பேரூரில் சாந்தலிங்கரைக் கண்டு உபதேசம் பெற விரும்பினார். அவருடைய பக்குவநிலையைச் சோதித்தறிந்து உபதேசம் அருளி தம்முடைய மாணாக்கராக்கிக் கொண்டார். பின் குமாரதேவர் குருவின் திருஉள்ளக்குறிப்பின்படிப் பல தலங்கட்கும் சென்றார். திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலத்தில் ) பெரியநாயகியம்மையின் திருவருளால் மகாராசாதுறவு, சுத்தசாதகம் முதலிய பல சாத்திரங்களையும் அருளினார். திருமுதுகுன்றத்தில் திருமடம் அமைத்துத் தங்கியிருந்த குமாரதேவரின் திருவருளுக்கு ஆளானார் சிதம்பரதேசிகர் என்பார். அவரை குமாரதேவர் தம் குருவாகிய சாந்தலிங்கப்பெருமானிடம் அழைத்துவந்தார். சிதம்பரசுவாமிகளின் மதிநுட்பத்தை உணர்ந்த சாந்தலிங்க அடிகள் தாமியற்றிய நூல்களுக்கு உரைசெய்யும்படி பணித்தார். சிதம்பர அடிகள் எழுதிய இவ்வுரை மெய்ப்பொருளை விளக்கும் வகையில் திட்பமும்,நுட்பமும் செறிந்து விளங்குகிறது. இச்சிதம்பர சுவாமிகள் சென்னைக்கருகிலுள்ள திருப்போரூர் என்னும் தலத்தினையடைந்து அங்கு மறைந்துகிடந்த முருகப்பெருமான் கோவிலைப் புதுப்பித்து வழிபாடு செய்து அங்கேயே தங்கியிருந்தனர். அவர் அருளிய பாடல்கள் “திருப்போரூர் சந்நிதிமுறை” என்று வழங்கப்படுகின்றன.
இறையருளோடு குருவருளும் பெற்று பல அடியார்களை உருவாக்கி வீரசைவ மரபைப் போற்றிவளர்த்த சாந்தலிங்கப்பெருமான் ஒரு மாசித்திங்கள் மகம் விண்மீன் கூடிய நிறைமதி நாளில் ஞானநிலை அடைந்து தாம் வழிபடும் கூத்தப்பெருமான் திருவடியில் கலந்தார். சாந்தலிங்கருடைய சமாதித் திருக்கோயிலும்,திருமடமும் கோயம்புத்தூருக்கு அருகேயுள்ள பேரூரில் பட்டிப்பெருமான் திருக்கோயிலுக்குக் கிழக்கே நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.