சனி, 28 பிப்ரவரி, 2009

இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம்

அன்புநலம் சான்றீர்,
இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த வேண்டியும்,அப்பாவித் தமிழர்கள் பலியாவதைத் தடுக்க வேண்டியும்,எல்லாவல்ல பரம்பொருளிடம் வேண்டி கொங்கு நாட்டு ஆதீனங்கள்,அருளாளர்கள் மற்றும் தமிழகச் சிவனடியார்கள் அனைவரும் தமிழக தெய்வீகப் பேரவை சார்பில் சர்வதாரி வருடம் மாசிமாதம் 17 ஆம் தேதி ( 01.03.2009 ) ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கோவை,காந்திபுரம்,தமிழ்நாடு உணவகம் முன்பாக திருக்கயிலாய மரபு மெந்கண்டார் வழிவழி பேரூராதீனம்
கயிலைக்குருமணி சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் அருளாசியுடன் கொங்கு நாட்டு ஆதீனங்கள் தலைபையில் அருளாளர்கள்,சிவனடியார்கள் கலந்துகொள்ளும் உண்ணாநோன்பு நடைபெறுக்கிறது.தமிழ்,சமயப்பற்று உள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு
தமிழக அருளாளர்கள் மற்றும் சிவனடியார்கள்

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

மகா சிவராத்திரி விழா

உதகை காந்தள் ஆலமர்செல்வர் திருமடத்தில் சிவராத்திரி விழா


குரு மகா சந்நிதானம் அன்பர்களுக்கு ஆசி வழங்குகிறார்
ஆதீன கர்த்தரும் உதகைமாவட்ட ஆட்சிதலைவர் திரு.ஆனந்தராவ் பாட்டீல் அவர்களுடன் ஓம்பிரகாஷ் துவக்கப்பள்ளி மாணவர்கள்
அடியார்களுக்கு அன்னம் பாலிப்பு
7500 க்கும் மேற்பட்ட அன்பர்களுக்கு உணவு தயார் செய்வதில் திருமடத்து தொண்டர்களே இரவு முழுவதும் ஆர்வர்த்துடன் ஈடுபட்ட காட்சி

புதன், 18 பிப்ரவரி, 2009

ஈசா யோகா மையம்

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈசா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் தவத்திரு.அடிகளார் அவர்களை மரியாதை நிமித்தம் இன்று மாலை ( 18.02.09 ) சந்தித்தார்கள்.


அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் சந்நிதியில்
திருமறை மண்டபத்தில் அடிகளார் அவர்களுடன் உரையாடுகின்றார்
ஆதீன கர்த்தரும்,இளைய அடிகளாரும் சத்குரு அவர்களுக்கு மரியாதை செய்தல்
தவத்திரு.இளைய அடிகளாரும் ,சத்குரு அவர்களும்







புதன், 11 பிப்ரவரி, 2009

அழைப்பிதழ்

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருக்கோயில்
நன்னீராட்டுப் பெருவிழா,குருபூசை விழா
அழைப்பிதழ்மெய்யன்புடையீர்,
நிகழும் திருவள்ளுவராண்டு 2040,சர்வதாரி ஆண்டு மாசித்திங்கள் 20ஆம் நாள் (04.03.2009) புதன்கிழமை முதல் 25ஆம் நாள் (09.03.2009)திங்கட்கிழமை முடிய அருள்மிகு சாந்தலிங்க அடிகளார் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா,அம்பலவாணர் திருமஞ்சனம்,குருபூசை விழா,சத்வித்யா சன்மார்க்க சங்க 93ஆம் ஆண்டு விழா,வைராக்கிய தீபம்,வைராக்கிய சதகம் கருத்தரங்கம்,தமிழ் நெறி வழிபாட்டாளர்கள் கருத்தரங்கம் ஆகியன நடைபெற உள்ளன.
குருபூசை விழாவினையொட்டி கல்வி நிலையங்களின் ஆண்டு விழாக்களும் நிகழ்சி நிரலில் குறித்தாங்கு நிகழவுள்ளன. விழாக்களில் பங்கு கொண்டு கண்ணினால் நல்விழாப் பொலிவு கண்டு மண்ணினில் பிறந்தார் பெறும் பயன்பெற்று அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் திருவருளுக்கு உரியவர்கள் ஆகுமாறு அன்புடன் ஆகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இங்கனம்
சாந்தலிங்க இராமசாமி அடிகள் விழாக்குழுவினர்.
பேரூர் ஆதீனம்,
பேரூர்,கோவை.10.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

துறவியர் மாநாடு

மும்பையில் ஜனவரி 28 மற்றும் 29 ஆம் தேதி நடைபெற்ற தர்ம ரட்ச மஞ்ச் எனும் துறவியர் மாநாட்டில் இளைய அடிகளார்

சுவாமி தயானந்த சரசுவதி அவர்களுடன்


சுவாமி சிதானந்த சரசுவதி அவர்களுடன்

திரு.பிரவீண் தொகாடியா அவர்களுடன்
திரு.அசோக் சிங்கால் அவர்களுடன்

கர்நாடகா மாநிலம் மான்வி,திரு.சிவமூர்த்தி சிவாச்சாரியா சுவாமி அவர்களுடன்
திரு.சுப்பிரமணிய சுவாமி அவர்களுடன்