சனி, 28 பிப்ரவரி, 2009

இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம்

அன்புநலம் சான்றீர்,
இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த வேண்டியும்,அப்பாவித் தமிழர்கள் பலியாவதைத் தடுக்க வேண்டியும்,எல்லாவல்ல பரம்பொருளிடம் வேண்டி கொங்கு நாட்டு ஆதீனங்கள்,அருளாளர்கள் மற்றும் தமிழகச் சிவனடியார்கள் அனைவரும் தமிழக தெய்வீகப் பேரவை சார்பில் சர்வதாரி வருடம் மாசிமாதம் 17 ஆம் தேதி ( 01.03.2009 ) ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கோவை,காந்திபுரம்,தமிழ்நாடு உணவகம் முன்பாக திருக்கயிலாய மரபு மெந்கண்டார் வழிவழி பேரூராதீனம்
கயிலைக்குருமணி சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் அருளாசியுடன் கொங்கு நாட்டு ஆதீனங்கள் தலைபையில் அருளாளர்கள்,சிவனடியார்கள் கலந்துகொள்ளும் உண்ணாநோன்பு நடைபெறுக்கிறது.தமிழ்,சமயப்பற்று உள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு
தமிழக அருளாளர்கள் மற்றும் சிவனடியார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக