புதன், 11 பிப்ரவரி, 2009

அழைப்பிதழ்

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருக்கோயில்
நன்னீராட்டுப் பெருவிழா,குருபூசை விழா
அழைப்பிதழ்மெய்யன்புடையீர்,
நிகழும் திருவள்ளுவராண்டு 2040,சர்வதாரி ஆண்டு மாசித்திங்கள் 20ஆம் நாள் (04.03.2009) புதன்கிழமை முதல் 25ஆம் நாள் (09.03.2009)திங்கட்கிழமை முடிய அருள்மிகு சாந்தலிங்க அடிகளார் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா,அம்பலவாணர் திருமஞ்சனம்,குருபூசை விழா,சத்வித்யா சன்மார்க்க சங்க 93ஆம் ஆண்டு விழா,வைராக்கிய தீபம்,வைராக்கிய சதகம் கருத்தரங்கம்,தமிழ் நெறி வழிபாட்டாளர்கள் கருத்தரங்கம் ஆகியன நடைபெற உள்ளன.
குருபூசை விழாவினையொட்டி கல்வி நிலையங்களின் ஆண்டு விழாக்களும் நிகழ்சி நிரலில் குறித்தாங்கு நிகழவுள்ளன. விழாக்களில் பங்கு கொண்டு கண்ணினால் நல்விழாப் பொலிவு கண்டு மண்ணினில் பிறந்தார் பெறும் பயன்பெற்று அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் திருவருளுக்கு உரியவர்கள் ஆகுமாறு அன்புடன் ஆகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இங்கனம்
சாந்தலிங்க இராமசாமி அடிகள் விழாக்குழுவினர்.
பேரூர் ஆதீனம்,
பேரூர்,கோவை.10.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக