சனி, 15 ஆகஸ்ட், 2009

தென்கயிலாய தவநெறிச்சாலை

கொங்கு நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் முதன்மையானது வெள்ளிவெற்பு, தென்கயிலை எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரித் திருத்தலம். இம்மலைச்சாரலில், கோவை,சிறுவாணி நெடுஞ்சாலையில் ( நல்லூர்பதி வயல் )தென்கயிலைத் தவநெறிச்சாலை அமைதியான இடந்நில்,நாலாயிரம் சதுரடியில் வழிபாட்டு மண்டபம்,பயிற்சியாளர்கள் தங்கும் அறைகள்,கருத்தரங்கு அறையாதியன பேரூராதீனத்தின் சார்பாக உருவாகியிருக்கின்றன.

திருநெறிய வழிபாட்டுப்பயிற்சி,தியானம்,கூட்டுவழிபாடு,சிற்றூர்மக்களிடையே வாழ்வியல்,அருளியல் நெறிகளுக்கு வழிகாட்டுபவர்களுக்குப் பயிற்சியாதியனவற்றை பரப்புதற்கான தொண்டர்களை உருவாக்கும் நெறிமுறைகளைத் தருவதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

தென்கயிலைத் தவநெறிச்சாலைத் திறப்புவிழா,பாணலிங்கம் நிறுவுதல் நிகழ்வுகள் நிகழும் திருவள்ளுவராண்டு 2040 ஆவணித்திங்கள் 16,17 ( 01,02.09.09 )செவ்வாய்,புதன் அன்று நடைபெறுகின்றன.அருள்நெறியாளர்கள் பங்குகொண்டு திருவருளுக்கு உரியவர்களாகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சத்வித்யா சன்மார்க்க சங்கம்,
சாந்தலிங்கர் திருமடம்,
பேரூராதீனம்,பேரூர்,
கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக