திங்கள், 24 ஜனவரி, 2011

அருள்மிகு சாந்தலிங்கர் நூல் உரைச்சாரம்


அருள்மிகு சாந்தலிங்க அடிகளார் அருளிய வைராக்கிய தீபம்,வைராக்கிய சதகம்,கொலை மறுத்தல்,அவிரோத உந்தியார் ஆகிய நான்கு நூல்களுக்கும் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் உரை எழுதியுள்ளார். யாழ்பாணம் ஆறுமுகநாவலர் அவர்களும் இந்நான்கு நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.சிதம்பர சாமிகளின் உரையினையொட்டி புலவர் சிவஞானம் அவர்கள் உரைச்சாரம் ஒன்றினை இயற்றியுள்ளார். அந்நூல் வெளியீட்டு விழா திருவள்ளுவராண்டு 2041 விக்ருதி வருடம் மார்கழித்திங்கள் 29ஆம் நாள் ( 13.01.2011 ) வியாழன் அன்று முற்பகல் 11 மணி அளவில் பேரூராதீன வளாகத்தில் சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகையின் முன்னிலையில் நடைபெற்றது.








இந்நூலின் புரவலர்களில் ஒருவரான திரு.மா.சங்கரன் ( அமெரிக்கா ) அவர்களின் சார்பாக அவரது தமையனார் திரு.மா.பாலசுப்பிரமணியம் அவர்கள் சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகை அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றார்.

இந்நூலின் புரவலரான திரு.பாலசுப்பிர மணியம் அவர்கள் நூலினை வெளியிட மங்கலப்பாளையம் ந.செல்லப்பன் அவர்கள் பெற்றுக் கொண்டார்


உலக வங்கியின் வேளாண்குழு மேனாள் உறுப்பினர் திரு.மா.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு சிறப்பு செய்யப்படுகின்றது.
நூலாசிரியர் புலவர்.சிவஞானம் அவர்களுக்கு பேரூரடிகளார் அவர்கள் சிறப்பு செய்கிறார்.
நூலாசிரியரின் கருத்துரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக