சனி, 25 செப்டம்பர், 2010

உருத்திர பசுபதி நாயனார்உருத்திர பசுபதி நாயனார் புராணம்
நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் பெரும்புனல் நீத்தம்

மலர்த்த டம்பணை வயல்புகு பொன்னிநன் னாட்டுக்

குலத்தின் ஓங்கிய குறைவிலா நிறைகுடி குழுமித்

தலத்தின் மேம்படு நலதத்து பெருந்திருத் தலையூர். 1


வான ளிப்பன மறையவர் வேளவியின் வளர்தீ

தேன ளிப்பன நறுமலர் செறிசெழுஞ்சோலை

ஆன ளிப்பன அஞ்சுகந் தாடுவார்க்கு அவ்வூர்

தான ளிப்பன தருமமும் நீதியுஞ் சால்பும். 2


அங்கண் மாநக ரதனிடை அருமறை வாய்மைத்

துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்

செங்கண் மால்விடை யார்செழும் பொன்மலை வல்லி

பங்க னாரடி மைத்திறம் பாபசு பதியார். 3


ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு

மாய னாரறி யமாமலர்ச் சேவடி வழுத்தும்

தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி

நேய நெஞ்சின் ராகிஅத் தொழில்தலை நினறார். 4


கரையில் கம்பலை புள்ளொலி கறங்கிட மருங்கு

பிரச மென்சுரும் பறைந்திடக் கருவாரல் பிறழும்

நிறைநெ டுங்கயல் நீரிடை நெருப்பெழுந் தனைய

விரைநெ கிழ்ந்தசெங் கமலமென பொயகையுள் மேவி. 5


தெள்ளு தண்புனல் கழுத்தள வாயிடைச் செறிய

உள்ளு றப்புக்கு நின்றுகை உச்சிமேற் குவித்துக்

தள்ளு வெண்டிரைக் கங்கைநீர் த்தும்பிய சடையார்

கொள்ளும் அன்பினில் உருந்திரங் குறிப்பொடு பயின்றார். 6


அரும றைப்பய னாகிய உருத்திரம் அதனை

வரும றைப்பெரும் பகலும்எல் லியும்வழு வாமே

திரும லர்ப்பொகுட் டிருநதவன் அனையவர் சிலநாள்

ஒருமை உய்த்திட உமைஇடம் மகிழ்நதவர் உவந்தவர். 7


காதல் அன்பர்தம் அருந்தவப் பெருமையும் கலந்த

வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி

ஆதி நாயகர் அமர்ந்தருள் செய்யாமற் றவர்தாம்

தீதி லாநிலைச் சிவபுரி எல்லையிற் சேர்ந்தார். 8


நீடும் அன்பினல் உருத்திரம் ஓதிய நிலையால்

ஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்குப்

பாடுபெற்றசீர் உருத்திர பசுபதி யாராம்

கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற. 9


அயில்கொள் முக்குடு மிப்படை யார்மருங் கருளால்

பயில் உருத்திர பசுபதி யார்திறம் பரசி

எயிலுடைத்தில்லை எல்லையில் நாளைப்போ வாராம்

செயலுளடைப்புறத் திருத் தொண்டர் திறத்தினை மொழிவாம்..10


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக