ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

இளைய அடிகளாரின் அமெரிக்கா வருகை

சுவாமி சச்சிதானந்தா அவர்கள் உலகமெங்கும் உள்ள யோகக்கலை பயின்றவர்களால் அறியப்பட்ட ஒரு மாமனிதர்.இந்தியாவிலும்,இலங்கையிலும் பின்னர் அமெரிக்காவிலும் தனது சேவையினை தொடர்ந்தார்.வர்ஜீனியாவில் 700 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இவரது இன்டெக்ரல் யோகா இன்ஸ்டியூட் இந்திய கலைகளை உலக மக்களிடையே பரப்பி வருகிறது.


இவர்களது அழைப்பை ஏற்று திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழி திருப்பேரூர் ஆதீனம் இளையபட்டம் மற்றும் உதகமண்டலம் ஆலமர் செல்வர் திருமடத்தின் ஆறாவது குருமகா சந்நிதானமாகவும் விளங்குகின்ற தவத்திரு.மருதாசல அடிகளார் மே 13ஆம் தேதிமுதல் 18 ஆம் தேதி வரை பாரத பண்பாடு மற்றும் சமயம் சார்ந்த வழிபாடுகள் பற்றிய உரைநிகழ்த்த உள்ளார்.>

அது சமயம் அமெரிக்க வாழ் தமிழர்கள் தங்களது பகுதிகளுக்கும் வருகை தர அழைத்துள்ளனர்.தமிழர் அமைப்புகள் வாழ்வியல் மற்றும் அருளியல் சார்ந்த தங்களது ஐயங்களுக்கு அவருடன் கலந்து உரையாட அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்பு கொள்ள perurmadam@gmail.com.

2 கருத்துகள்:

  1. சனாதன தர்மத்தின் பெருமை இந்தியாவில் விமர்சனத்துக்குரியதாக இருந்தாலும் வெளிநாடுகளில் புதிய ஒரு வடிவமாக மிளிர்கிறது! தகவலுக்கு நன்றிகள்! அடியேன்தான் இங்கு முதல் பதிவில் கருத்தா!!!

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி திரு.தங்கமுகுந்தன் அவர்களே.முதல் பின்னூட்டமும் உங்களுடையதே.

    பதிலளிநீக்கு