வெள்ளி, 31 டிசம்பர், 2010
ஞாயிறு, 3 அக்டோபர், 2010
செவ்வாய், 28 செப்டம்பர், 2010
திங்கள், 27 செப்டம்பர், 2010
சனி, 25 செப்டம்பர், 2010
உருத்திர பசுபதி நாயனார்
உருத்திர பசுபதி நாயனார் புராணம்
நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் பெரும்புனல் நீத்தம்
மலர்த்த டம்பணை வயல்புகு பொன்னிநன் னாட்டுக்
குலத்தின் ஓங்கிய குறைவிலா நிறைகுடி குழுமித்
தலத்தின் மேம்படு நலதத்து பெருந்திருத் தலையூர். 1
வான ளிப்பன மறையவர் வேளவியின் வளர்தீ
தேன ளிப்பன நறுமலர் செறிசெழுஞ்சோலை
ஆன ளிப்பன அஞ்சுகந் தாடுவார்க்கு அவ்வூர்
தான ளிப்பன தருமமும் நீதியுஞ் சால்பும். 2
அங்கண் மாநக ரதனிடை அருமறை வாய்மைத்
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்
செங்கண் மால்விடை யார்செழும் பொன்மலை வல்லி
பங்க னாரடி மைத்திறம் பாபசு பதியார். 3
ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு
மாய னாரறி யமாமலர்ச் சேவடி வழுத்தும்
தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி
நேய நெஞ்சின் ராகிஅத் தொழில்தலை நினறார். 4
கரையில் கம்பலை புள்ளொலி கறங்கிட மருங்கு
பிரச மென்சுரும் பறைந்திடக் கருவாரல் பிறழும்
நிறைநெ டுங்கயல் நீரிடை நெருப்பெழுந் தனைய
விரைநெ கிழ்ந்தசெங் கமலமென பொயகையுள் மேவி. 5
தெள்ளு தண்புனல் கழுத்தள வாயிடைச் செறிய
உள்ளு றப்புக்கு நின்றுகை உச்சிமேற் குவித்துக்
தள்ளு வெண்டிரைக் கங்கைநீர் த்தும்பிய சடையார்
கொள்ளும் அன்பினில் உருந்திரங் குறிப்பொடு பயின்றார். 6
அரும றைப்பய னாகிய உருத்திரம் அதனை
வரும றைப்பெரும் பகலும்எல் லியும்வழு வாமே
திரும லர்ப்பொகுட் டிருநதவன் அனையவர் சிலநாள்
ஒருமை உய்த்திட உமைஇடம் மகிழ்நதவர் உவந்தவர். 7
காதல் அன்பர்தம் அருந்தவப் பெருமையும் கலந்த
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி
ஆதி நாயகர் அமர்ந்தருள் செய்யாமற் றவர்தாம்
தீதி லாநிலைச் சிவபுரி எல்லையிற் சேர்ந்தார். 8
நீடும் அன்பினல் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்குப்
பாடுபெற்றசீர் உருத்திர பசுபதி யாராம்
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற. 9
அயில்கொள் முக்குடு மிப்படை யார்மருங் கருளால்
பயில் உருத்திர பசுபதி யார்திறம் பரசி
எயிலுடைத்தில்லை எல்லையில் நாளைப்போ வாராம்
செயலுளடைப்புறத் திருத் தொண்டர் திறத்தினை மொழிவாம்..10
புதன், 22 செப்டம்பர், 2010
ஞாயிறு, 19 செப்டம்பர், 2010
சனி, 11 செப்டம்பர், 2010
செவ்வாய், 7 செப்டம்பர், 2010
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
அருள்மிகு உமாபதி முனிவர் கோயில்
ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010
ஆடைக்கொடை
வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010
சுந்தரர் குருபூசை
வியாழன், 12 ஆகஸ்ட், 2010
வியாழன், 15 ஜூலை, 2010
புதன், 7 ஜூலை, 2010
நியூயார்க் மாநகரில் சொற்பொழிவு
வியாழன், 1 ஜூலை, 2010
அருள்நெறிப் பயிற்சி வகுப்பு,நியூஜெர்சி
அருள்நெறிப் பயிற்சி வகுப்பு
நாள் ; ஜூலை 10 சனிக்கிழமை
இடம் ; கிட்டீ கீப்வெல் முகாம்
35,ரூஸ்வெல்ட் டிரைவ்,
எடிசன்,
நியூஜெர்சி.08837
நிகழ்ச்சி நிரல்
காலை 10 மணிமுதல் இரவு 8.30 மணி வரை
1) திருமுறை அருட்பாடல்கள் ஓதுதல்
2) அக நோக்குப் பயிற்சி முதல்நிலை
3) மதிய உணவு – 12.30 மணிஅளவில்
4) குழு வழிபாட்டுப் பாடல்கள்
5) திருமுறைச் சொற்பொழிவு –தவத்திரு அடிகளார் அவர்கள்
6) எளியமுறை யோகாசனப் பயிற்சிகள் – வழங்குவோர் இன்டக்ரல் யோகப்பயிற்சி நிறுவனத்தினர்.,யோகாவில், வர்ஜீனியா.
7) அடிகளாருடன் சிறார்கள்- கதை சொல்லுதல்,
வினா – விடை
8) தேநீர் இடைவேளை 4.30 மணி
9) பூங்காவில் கலந்துரையாடுதல், குழு விளையாட்டுகள்
10) திருமுறை ஓதுதல்
11) அக நோக்குப் பயிற்சி இரண்டாம் நிலை
12) சந்தேகம் தெளிதல்
13) பேரொளி வழிபாடு ( தீபாராதனை )
14) இரவு சிற்றுண்டி
அருள்நெறிப் பயிற்சி வகுப்பு
இரண்டாம் நாள்
ஜூலை 11 காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை
1) தமிழ்முறை வேள்வி மற்றும் இறைவனுக்கு திருமஞ்சனம்
தவத்திரு அடிகளாரின் வழிகாட்டுதலில் சிறார்களே நடத்துதல்
2) திருமுறை அருட்பாடல்களை ஓதுதல்
3) அக நோக்குப் பயிற்சி மூன்றாம் நிலை
4) திருமுறை வழியில் வாழ்வியல் வழிபாடுகள்
5) சிறுவர்களுக்கான யோகப் பயிற்சிகள் – அடிகளாரின் வழிகாட்டுதலின்படி
6) மதிய உணவு – 12.30 மணி அளவில்
7) குழுப்பாடல்கள்
8) தவத்திரு மருதாசல அடிகளாரின் அருளுரை
9) வினா விடை நேரம்
10) 4.30 மணிக்கு பேரொளி வழிபாடு ( தீப ஆராதனை )
முகாமில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் திரு.சிவக்குமார் அவர்களை 908 693 0198, ksivakumar@yahoo.com, திரு.செந்தில்நாதன் அவர்களை 848 702 6581, msenthilnathan@hotmail.com முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்
செவ்வாய், 29 ஜூன், 2010
தெய்வம் தெளிமின் தெளிந்தார் பேணுமின்
போற்றி ஓம் நமசிவாய. திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனத்தின் இளைய பட்டம் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் அமெரிக்காவில் உள்ள தமிழ்ச்சங்கங்களின் அழைப்பை ஏற்று பெட்னா மாநாட்டிற்கு வருகை தர உள்ளார்கள்.மாநாட்டினைத் தொடர்ந்து அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க சைவம், யோகம்,தியானம், தமிழ்முறை வழிபாடு பற்றிய வகுப்புகளை எடுக்க உள்ளார். அடிகளாரது நிகழ்ச்சி நிரலை இத்துடன் இணைத்துள்ளோம். தாங்களும் கலந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
சூன் 29 மற்றும் சூலை 1 தாமரைக்கோவில்,
யோகாவில்,வர்ஜீனியா.
ஒருங்கிணைப்பாளர் ; திருமதி.புஸ்பா434 969 1161 .becky@moonstar.com, திரு.சதீஸ் 434 390 5266.
satishdaryanani@yahoo.com
சூலை 2 ஆரிஸ்பர்க் மற்றும் பிலடெல்பியா,பென்சில்வேனியா
சூலை3 முதல் 5 வரை பெட்னா தமிழ்ச்சங்கத் திருவிழா,
வாட்டர்பரி, கனெக்டிகட்
www.fetna.org
சூலை 6 , 7 பாஸ்டன், நியூயார்க்
சூலை 8 இன்டக்ரல் யோகா நிறுவனம்,நியூயார்க்.தொடர்பு எண்கள் 212 929 0585, 212 929 0586. info@iyiny.org, ramananda@iyiny.org
சூலை 9 நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க்
சூலை 10, 11 அருள்நெறிப் பயிற்சி வகுப்பு,எடிசன், நியூஜெர்சி யோகா,தியானம்,திருமுறை,வழிபாடு என குழந்தைகள் மற்றும் பெரியோர் அனைவருக்குமான எளிய நடைமுறை பயிற்சி வகுப்பு
திரு.செந்தில்நாதன் 848 702 6581
msenthilnathan@hotmail.com
சூலை12 முதல் 16வரை புளோரிடா
அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் திரு.சிவக்குமார் அவர்களை 908 693 0198,, 732 516 9139 எண்களில் தொடர்பு கொள்ளலாம். kshivakumar@yahoo.com